Tuesday, October 12, 2010

முல்லைத்தீவில் 11 விமான குண்டுகள் கண்டுபிடிப்பு


முல்லைத்தீவு காட்டுக்குள்ளிலிருந்து அதிசக்தி வாய்ந்த 11 விமான குண்டுகள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். முன்றரை அடி நீளமும் 2 1/2 அடி அகலமும் கொண்ட 50 கிலோகிராம் நிறையுடைய 04 விமான குண்டுகளும் 3 1/2 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட 25 கிலோகிராம் நிறையுடைய 07 விமான குண்டுகளுமே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போதே இவை கைப்பற்றப் பட்டுள்ளன. ஏ-35 முல்லைத்தீவு - பரந்தன் வீதியிலமைந்துள்ள காட்டுக்குள் காணப்பட்ட பதுங்கு குழிக்குள்ளிருந்தே மேற்படி விமான குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
TUESDAY, OCTOBER, 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment