Monday, November 9, 2009

ஏ(எச்1என்1): இலங்கையில் முதல் மரணம்::கண்டி வைத்திய தம்பதியரின் 16 வயது புதல்வன் உயிரிழப்பு


இலங்கையில் முதல் தடவையாக ஏ(எச்1என்1) இன்புளுவன்சா நோய்த்தாக்கத் திற்கு கண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பலியாகியுள்ளார். வைத்தியத் தம்பதியினரின் மகனான மேற்படி பாடசாலை மாணவன் கடந்த புதன்கிழமை இரவு கண்டி போதனா வைத்தியாலையில் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் இதுகுறித்து கவலையடையத் தேவையில்லையெனவும் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரஸ் தாக்கியிருக்கின்றது என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரசினால் பாடசாலை மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டமை ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட அம்மாவட்டத்தின் நகரப் பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படுவதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான மாணவர்கள் இருவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment