வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட 40 இலட்சம் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டிருப் பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் சுப்ரின்டன்ட் பிரபாத் ஜயவிக்கிரம நேற்றுத் தெரிவித்தார்.
துபாயிலிருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கும் கோல்ட் லீப் மற்றும் கோல்ட் சீல் வகையைச் சேர்ந்த 2 இட்சம் சிகரெட்டுக்களே கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தனியார் வியாபாரியொருவரது களஞ்சி யசாலையிலேயே மேற்படி சிகரெட்டுக்கள், ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. சுங்கத் திணைக்களம் வழங்கிய தகவலையடுத்து நேற்று சம்பவம் இடத்தை முற்றுகையிட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத சிகரெட் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த அப்புஹாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சந்தேகநபருக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரபாத் ஜயவிக்கிரம மேலும் கூறினார்.
கைப்பற்றப்பட்டிருக்கும் சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
MONDAY, APRIL 12, 2010லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment