Saturday, April 3, 2010

புனர்வாழ்வு நிலையங்கள்:பயிற்சியளிக்கப்படுவோருக்கென இரு பாடசாலைகள் அமைக்க தீர்மானம்




புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள . பொ. . சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றாதவர்களுக்கென பிரத்தியேகமாக இரண்டு பாடசாலைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணை யாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

மேற்படி, பரீட்சைகளுக்கு தோற்றாத புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதில் வயது ஒரு தடையாக இருப்பதனாலேயே இவர்களுக்கென பிரத்தியேகமாக இரண்டு பாடசாலைகளை நிறுவ தீர்மானிக் கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் கல்வியமைச்சுடன் இணைந்து இப்பாடசாலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆண்கள் பெண்களுக்கென வேறுவேறாக அமைக்கப்படும் பாடசாலை களில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள . பொ. . சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றாதவர்களுக்கென விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்னர் பரீட்சைகள் நடத்தப்படுமெனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதற்கென கொழும்பில் உயர் பாடசாலைகளில் கல்வி கற்கும் விசேட சித்திபெற்ற மாணவர்களை தமது விடு முறைக் காலத்தில் இந்த பாடசாலைகளுக்கு அழைத்து வந்து மேலதிக பயிற்சி வகுப்புக்களை நடத்த திட்டமிட்டிருப்பதா கவும் அவர் கூறினார். மேலும் இது தனித்து பாடசாலையாக மட்டுமன்றி, மாணவர்களின் பெற்றோர் வந்து செல்லக்கூடிய வகையில் ஒரு விடுதி போன்றே நடத்தப்படவிருப் பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
SATURDAY, APRIL 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment