Tuesday, July 27, 2010

ஐ. தே. க. வை மறு சீரமைக்கக் கோரி:ஸ்ரீகொத்தவுக்கு முன்னால் ஒருவர் தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக மான ஸ்ரீ கொத்தவின் முன்பாக நேற்று ஒருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

வெலிகமவைச் சேர்ந்த ரியன்ஸி அல்கம (60) என்பவரே பிட்டகோட்டே யிலுள்ள ஐ. தே. க. தலைமையகம் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஒருவர் தீப்பற்றி எரிவதனைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


உடலில் 60 சதவீத எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மேற்படி நபர் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமிருப்ப தாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்ஹ தெரிவித்தார்.

ஐ. தே. க.வினுள் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரியே இவர் தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டிருப்பதாக பிரதேச வாசிகளிடம் அவர் கூறியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட் டினார்.
TUESDAY, JULY 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment