யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட விமானப் போக்குவ ரத்துக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.
உற்சவத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பெரு ந்திரளான உள்நாட்டு மற்றும் புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்களின் வசதிக ளைக் கருத்திற்கொண்டே இவ்விசேட ஏற் பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமை ச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுலா சபையில் நேற்று மாலை இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நட த்தப்பட்டது. இம்மாநாட்டிலேயே அமைச் சர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அமை ச்சும் சுற்றுலாச் சபையும் இணைந்து இதற் கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு மூன்று விமான சேவை நிறுவனங்கள் தமது கட்ட ணங்களை 17 ஆயிரம் ரூபாவாக குறைத்தி ருப்பது இதுவே முதல் தடவையாகுமென மாநாட்டில் கலந்துகொண்ட சுற்றுலா சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். கலைச்செல்வம் தெரிவித்தார்.
இதேவேளை, பெருந்திரளான பக்தர்களின் யாழ். விஜ யத்தை முன்னிட்டு உற்சவ காலத்தின் இறுதி 10 நாட்க ளும் நாளொன்றுக்கு 05 விமான சேவைகள் வீதம் நடத் துவதற்கு இலங்கை விமானப்படை இணக்கம் தெரிவித் திருப்பதாகவும் அவர் கூறினார்.
நல்லூர் ஆலய உற்சவம் கடந்த 27 ஆம் திகதி கொடி யேற்றத்துடன் ஆரம்பமானது. ஓகஸ்ட் 19 ஆம் திகதி தேர்த் திருவிழா நடைபெறுவதுடன் 20 ஆம் திகதி தீர்த் தோற்சவதுடன் முடிவடையும். கடந்த வருடம் மோதல் களுக்கு மத்தியிலும் 60 ஆயிரம் பக்தர்கள் கொழும்பு உள் ளிட்ட ஏனைய வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாண த்துக்கு விஜயம் செய்திருந்தனர்.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஒரு இலட்சம் வரையிலான பக்தர்கள் வருவரென எதிர் பார்க்கப்படுகின்றது எனவும் சபையின் பணிப்பாளர் நாயகம் கலைச்செல்வம் தெரிவித்தார்.
தேர்த்திருவிழாவை தரிசிப்பதற்காக பலர் உற்சவத்துக்கு வருவதனால் ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலுமான காலப் பகுதியில் சேவையிலீடுபடுத்தப்படும் இரண்டு தனியார் நிறுவனங்களின் விமான சேவைக்கும் மேலதிகமாக நாளொன்றுக்கு 05 விமானங்களை பயணி கள் போக்குவரத்துக்காக இலங்கை விமானப் படை சேவையிலீடுபடுத்தவுள்ளது.
அத்துடன் கட்டணக் குறைப் பும் செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்போ மற்றும் டெக்கன் ஆகிய நிறுவனங்கள் தமது கட்டணங்களை 21 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் ரூபாவாகவும் இலங்கை விமானப்படை தனது கட்டணத்தை 19 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் ரூபாவாக வும் குறைந்துள்ளன.
மேலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் பொதிகளை சோதனையிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சு 05 முகவர் நிலையங்களை சிபாரிசு செய்துள்ளன. வெளிநாட்டுப் பயணிகள் இம்முகவர் நிலையத்தில் முன்கூட்டியே பதிவு களை செய்துகொள்வதன் மூலம் 24 மணித்தியாலங்களுக்குள் தமது பொதிகளை பாதுகாப்பு சோதனைக்குட்படுத்திக்கொள்ள முடியுமெனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இம்மாநாட்டில் அமைச்சருடன் சுற்றுலா சபைப் பணிப் பாளர் நாயகம் எஸ். கலைச்செல்வம், சபையின் முகாமைப் பணிப்பாளர் எம். டிலீப், விமானப் படை அதிகாரியான விங் கமாண்டர் தயால் விஜேரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
முப்பது வருடகாலமாக தீவிரவாதிகளின் பிடியில் இரு ந்த யாழ்ப்பாணத்தில் தற்போது ஐந்து விடுதிகளே இயங்கி வருகின்றன. எல்லாமாக 50 அறைகளே உள்ளன. இதனா லேயே இம்முறை புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர் களை மட்டுமே அழைப்பதை நோக்கமாகக் கொண்டு எமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பெரும்பாலானவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உறவினர்களது வீடுகள் இருப்பதனாலும் மதத்துடன் சம்பந்தப்பட்ட யாத் திரையாக இருப்பதனாலும் பயணிகள் தங்குமிட வசதி களை பெரிதாக பொருட்படுத்த மாட்டார்களென நம்பு கிறோமென்றும் அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.
புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்களை நல்லூர் உற் சவத்துக்கு அழைக்கும் பிரசார நடவடிக்கைகளை முன்னெ டுப்பதற்காக சுற்றுலா சபையின் பணிப்பாளர் நாயகம் நாளை லண்டன் செல்லவுள்ளார். உற்சவத்தைக் காண லண்டன், அவுஸ்தி§லியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் புலம்பெயர் வாழ் இந்துக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை விமானப் படை இரத்மலானையிலிருந்து பலாலி நோக்கி நேரடி விமான சேவையை நடத்தும் அதேவேளை பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விசேட போக்குவரத்து சேவைகளை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட விங்கமாண்டர் கூறினார்.
(30-07-2009 லக்ஷ்மி பரசுராமன்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment