Friday, March 26, 2010

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம்:மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை


சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் ‘எம். வி. டல்கா’ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முக வர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்த மான மேற்படி ‘எம். வி. டல்கா’ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர் களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடு க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
SATURDAY, MARCH 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment