கோழி இறைச்சியின் விலையை (கிலோவுக்கு) 350 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கால்நடை அபிவிருத்தியமைச்சின் செயலாளர் சுனிமல் சேனாரத்ன தெரிவித்தார்.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் உற்பத்திச் செயலவு 340 ரூபாவாக இருந்த போதும் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் தலையிட்டு கிலோவொன்றின் விற்பனை விலையை 350 ரூபாவாக நிர்ணயித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ப்ரொயிலர் கோழி ஒன்று இறைச்சிக்கு தயாராகும் வரை அதற்கான விற்றமின், மருந்து மற்றும் ஊசிக்கான செலவுகள் அதிகமாகையால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விலை நிர்ணயத்தை கையாள வேண்டியிருப்பதாக வும் அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நுகர்வோரின் தேவைக்கேற்ற வகையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் உற்பத்தியளவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் அதேவேளை நுகர்வோரின் தேவை ஈடுசெய்யப்பட முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவற்றை இறக்குமதி செய்ய தயாராகவிருப்பதாகவும் செயலாளர் சுனிமல் சேனாரத்ன கூறினார்.
வடக்கு, கிழக்கில் மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து நாடளாவிய ரீதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் நுகர்வுப் பெறுமானம் அதிகரிக்கப்பட்டி ருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட 9500 மெற்றிக்தொன் நிறைகொண்ட கோழி இறைச்சி தற்போது 11 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
THURSDAY, MARCH 18, 2010லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment