Tuesday, March 9, 2010

கூடுதல் விலையில் அரிசி விற்பனை:நாடு முழுவதும் இன்று முதல் திடீர் முற்றுகை நடவடிக்கை


விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் வகையில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக வர்த்தக விவகார நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முற்றுகை நடவடிக்கையின் போது நிர்ணய விலையிலும் பார்க்க கூடிய விலைக்கு அரிசி விற்பனை செய்யும் எவரும் எவ்வித தராதரமும் கட்சி பேதமுமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதியெனவும் அமைச்சர் பந்துல கூறினார்.


அனைத்து மாவட்டங்களிலுமுள்ள நுகர்வோர் அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் முற்றுகையிடும் பணியில் இன்று முதல் தீவிரமாக இறங்கவிருப்பதனால் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பதுடன், போதுமான அளவு வாகன வசதிகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு பணித்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தகவல் தொடர்பாடல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு வரைக்கும் தேவையான அரிசி எம்மிடம் கையிருப்பில் உள்ளது. சில வர்த்தகர்கள் பண்டிகைக் காலத்தை காரணம் காட்டி அரிசியை நிர்ணய விலையிலும் பார்க்கக் கூடிய விலைக்கு அதனை விற்பனை செய்து வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துளளன.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் நிலையங்களை தராதரம், கட்சி பேதமின்றி முற்றுகையிட்டு சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த வருடம் மாத்திரம் அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நிலையங்களிலிருந்து சுமார் 22 இலட்சம் ரூபா வரை தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைத்து வகையான அரிசியும் நுகர்வோர் கொள்வனவுக்காக தேவையானவரை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு ள்ளது. மொத்த விற்பனை விலையடிப்படையில் சம்பா ஒரு இலூகிராம் 63 ரூபாவாகவும், ஸ்டிம் நாடு 52 ரூபாவாகவும், பச்சை அரிசி 47 ரூபாவாகவும்,
வாசுமதி சம்பா 64 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை விவசாயிகளிடமிருந்து 28ம் திகதி முதல் ஒரு கிலோ அரிசியை 30 ரூபாவுக்குக் கொள்வனவு செய்து அதனை ஆகக் கூடியது 70 ரூபாவுக்கு விற்பனை செய்வதனையே நாம் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றோம்.
அரிசி போதுமானவரை கையிருப்பில் இருப்பதனால் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்நிலையில், கூடுதல் விலையில் விற்பனை செய்ய முனைவோரை சட்டத்துக்கு முன் நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோமெனவும் அமைச்சர் கூறினார்.
WEDNESDAY, MARCH 10, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment