Friday, July 31, 2009

மீரிஹானை பொலிஸ் பிரிவில் இரு சடலங்கள் மீட்பு

மீரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்தை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த இரு ஆண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மீரிஹான பொலிஸார் இக்கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்க ளாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ள போதும்இ அது பற் றிய தகவல்கள் ஊர்ஜிதம் செய் யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மேலும் குறிப்பிட்டார்(31-07-2009 லக்ஷ்மி பரசுராமன்)

Thursday, July 30, 2009

நல்லூர் வருடாந்த உற்சவத்தையிட்டு ஓக. 12 – 22 வரை விசேட விமான சேவை

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட விமானப் போக்குவ ரத்துக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.

உற்சவத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பெரு ந்திரளான உள்நாட்டு மற்றும் புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்களின் வசதிக ளைக் கருத்திற்கொண்டே இவ்விசேட ஏற் பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமை ச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுலா சபையில் நேற்று மாலை இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நட த்தப்பட்டது. இம்மாநாட்டிலேயே அமைச் சர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அமை ச்சும் சுற்றுலாச் சபையும் இணைந்து இதற் கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு மூன்று விமான சேவை நிறுவனங்கள் தமது கட்ட ணங்களை 17 ஆயிரம் ரூபாவாக குறைத்தி ருப்பது இதுவே முதல் தடவையாகுமென மாநாட்டில் கலந்துகொண்ட சுற்றுலா சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். கலைச்செல்வம் தெரிவித்தார்.

இதேவேளை, பெருந்திரளான பக்தர்களின் யாழ். விஜ யத்தை முன்னிட்டு உற்சவ காலத்தின் இறுதி 10 நாட்க ளும் நாளொன்றுக்கு 05 விமான சேவைகள் வீதம் நடத் துவதற்கு இலங்கை விமானப்படை இணக்கம் தெரிவித் திருப்பதாகவும் அவர் கூறினார்.

நல்லூர் ஆலய உற்சவம் கடந்த 27 ஆம் திகதி கொடி யேற்றத்துடன் ஆரம்பமானது. ஓகஸ்ட் 19 ஆம் திகதி தேர்த் திருவிழா நடைபெறுவதுடன் 20 ஆம் திகதி தீர்த் தோற்சவதுடன் முடிவடையும். கடந்த வருடம் மோதல் களுக்கு மத்தியிலும் 60 ஆயிரம் பக்தர்கள் கொழும்பு உள் ளிட்ட ஏனைய வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாண த்துக்கு விஜயம் செய்திருந்தனர்.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஒரு இலட்சம் வரையிலான பக்தர்கள் வருவரென எதிர் பார்க்கப்படுகின்றது எனவும் சபையின் பணிப்பாளர் நாயகம் கலைச்செல்வம் தெரிவித்தார்.

தேர்த்திருவிழாவை தரிசிப்பதற்காக பலர் உற்சவத்துக்கு வருவதனால் ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலுமான காலப் பகுதியில் சேவையிலீடுபடுத்தப்படும் இரண்டு தனியார் நிறுவனங்களின் விமான சேவைக்கும் மேலதிகமாக நாளொன்றுக்கு 05 விமானங்களை பயணி கள் போக்குவரத்துக்காக இலங்கை விமானப் படை சேவையிலீடுபடுத்தவுள்ளது.
அத்துடன் கட்டணக் குறைப் பும் செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்போ மற்றும் டெக்கன் ஆகிய நிறுவனங்கள் தமது கட்டணங்களை 21 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் ரூபாவாகவும் இலங்கை விமானப்படை தனது கட்டணத்தை 19 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் ரூபாவாக வும் குறைந்துள்ளன.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் பொதிகளை சோதனையிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சு 05 முகவர் நிலையங்களை சிபாரிசு செய்துள்ளன. வெளிநாட்டுப் பயணிகள் இம்முகவர் நிலையத்தில் முன்கூட்டியே பதிவு களை செய்துகொள்வதன் மூலம் 24 மணித்தியாலங்களுக்குள் தமது பொதிகளை பாதுகாப்பு சோதனைக்குட்படுத்திக்கொள்ள முடியுமெனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இம்மாநாட்டில் அமைச்சருடன் சுற்றுலா சபைப் பணிப் பாளர் நாயகம் எஸ். கலைச்செல்வம், சபையின் முகாமைப் பணிப்பாளர் எம். டிலீப், விமானப் படை அதிகாரியான விங் கமாண்டர் தயால் விஜேரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

முப்பது வருடகாலமாக தீவிரவாதிகளின் பிடியில் இரு ந்த யாழ்ப்பாணத்தில் தற்போது ஐந்து விடுதிகளே இயங்கி வருகின்றன. எல்லாமாக 50 அறைகளே உள்ளன. இதனா லேயே இம்முறை புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர் களை மட்டுமே அழைப்பதை நோக்கமாகக் கொண்டு எமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பெரும்பாலானவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உறவினர்களது வீடுகள் இருப்பதனாலும் மதத்துடன் சம்பந்தப்பட்ட யாத் திரையாக இருப்பதனாலும் பயணிகள் தங்குமிட வசதி களை பெரிதாக பொருட்படுத்த மாட்டார்களென நம்பு கிறோமென்றும் அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.
புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்களை நல்லூர் உற் சவத்துக்கு அழைக்கும் பிரசார நடவடிக்கைகளை முன்னெ டுப்பதற்காக சுற்றுலா சபையின் பணிப்பாளர் நாயகம் நாளை லண்டன் செல்லவுள்ளார். உற்சவத்தைக் காண லண்டன், அவுஸ்தி§லியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் புலம்பெயர் வாழ் இந்துக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை விமானப் படை இரத்மலானையிலிருந்து பலாலி நோக்கி நேரடி விமான சேவையை நடத்தும் அதேவேளை பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விசேட போக்குவரத்து சேவைகளை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட விங்கமாண்டர் கூறினார்.
(30-07-2009 லக்ஷ்மி பரசுராமன்)

Wednesday, July 29, 2009

பஹ்ரேன் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு இலங்கை வருகை:விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு இருதரப்பு பேச்சுக்கள் ஆரம்பம்

பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உட்பட உயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டின் பிரதமர் செய்க் கலிபா பின் சல்மான் அல்- கலிபா மற்றும் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்-கலிபா ஆகியோருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி நிலைநாட்டியிருப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது :-

இடம்யெர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமென அந்நாட்டின் பிரதமர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் 180 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நான் அவர்களிடம் விளக்கிக் கூறினேன். அதனை நன்கு புரிந்துகொண்டதாக கூறிய பஹ்ரேன் பிரதமர், அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அனைத்து வளைகுடா நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் பஹ்ரேனில் சேவையாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் அங்கே சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை, பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவர். (29-07-2009)

மடுமாதா ஓகஸ்ட் உற்சவம்:பக்தர்கள் இறுதி 4 நாட்களே புனித பிரதேசத்தில் தங்க முடியும்

மடுமாதா ஓகஸ்ட் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் இறுதி நான்கு நாட்களுக்கு மாத்திரமே மடு புனிதப் பிரதேசத்தில் தங்க முடியுமென உயர்மட்டத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மடு தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்விசேட கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பிரார்த்தனையில் ஈடுபடும் வகையிலும் ஒழுங்குகள் இக்கூட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் எதிர்வரும் 06 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் மடு தேவாலய உற்சவத்துக்காக வரும் பக்தர்கள் மடு புனித பிரதேசத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். உற்சவம் முடிந்ததும் பக்தர்கள் மதவாச்சி சோதனைச்சாவடிக்கூடாக அநுராதபுரம் சென்றுவிட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான இறுதி நான்கு நாட்களும் பக்தர்கள் மடு புனிதப் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கப்படுவர்.
ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மதவாச்சி சோதனைச் சாவடி திறந்திருக்கும்.
12, 13 ஆகிய தினங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரையிலும், 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சோதனைச்சாவடி திறந்திருக்கும். விசேட உற்சவ தினமான 15 ஆம் திகதியன்று அதிகாலை மூன்று மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சோதனைச் சாவடியினூடாக பக்தர்கள் தேவாலயத்தை தரிசிக்க வந்துபோக முடியும்.

இதேவேளை 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் இரவு 10 மணிக்குப் பின்னரும் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும், 15, 16 ஆகிய திகதிகளில் இரவு 10 மணிக்குப் பின்னரும், 17 ஆம் திகதி இரவு 2 மணிக்குப் பின்னரும் மதவாச்சி சோதனைச் சாவடி திறக்கப்பட்டிருக்கும். (29-07-2009)s

Tuesday, July 28, 2009

நாணய நிதியம் வழங்கவுள்ள கடனில் முதல் தவணை இன்று கிடைக்கிறது; 7 தவணைகளில் கடன்; 3 தவணை கடன் இவ்வருடம் கிட்டும்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் முதல் தவணையாக 322 மில்லியன் டொலர்கள் இன்று (28) இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கவிருப்பதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்றுத் தெரிவித்தார்.ஏழு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இக்கடன் தொகையின் மூன்று தவணைகளை இவ்வருடத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை இலங்கை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியையும் ஸ்திரத்தன்மையையும் தொடர்ந்தும் பேண முடிவதுடன் ஏனைய நாடுகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை மீது அதி கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது ஊன்றுகோலாக அமைவதாகவும் ஆளுநர் கூறினார்.வெளிநாடுகளிலிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கும் உலக வங்கி உள்ளிட்ட பாரிய நிதி நிறுவனங்களிலிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி சாதகமாக அமைவதுடன் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏனைய உலக நாடுகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த வருடம் சிறப்பாகவிருந்ததாக அறிவித்திருக்கும் பட்சத்தில் எதற்காக தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற வேண்டுமென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஆளுநர் கூறியதாவது:-கடந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை பார்க்கையில் கடன்பெற வேண்டியது அவசியமில்லை. இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் உலகின் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கும் ஏற்பட்டுள்ளது.அதனை ஈடு செய்யும் வகையிலும் ஏனைய நாடுகளிடமிருந்து தொடர்ந்தும் கடனுதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘கோட்டா முறை’ மூலம் 1. 9 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்காக 300 பங்குகளையே முதலில் கோரியிருந்தோம். எமது கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு விரும்பினால் மேலும் 100 பங்குகளுக்கு கோரிக்கை விடுக்க முடியுமெனக் கூறியது.எவ்வளவு நிதியை நாம் கையிருப்பில் வைத்துக்கொள்கிறோமோ அது சந்தர்ப்பத்துக்கு கைகொடுக்கும் என்பதனை உலகப் பொருளாதார நெருக்கடியின்போது நாம் நன்கு கற்றுக்கொண்டோம்.

தற்போது ஒரு வருடத்துக்கான அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு நாம் செயற்படவில்லை.ஒரு தசாப்தத்தையே இலக்கு வைத்து செயற்படுகின்றோம். இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதற்காக 400 பங்குகளுக்கு கோரிக்கை விடுத்ததற்கு அமைவாகவே நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.நான்கு வருடங்களுக்குள் அதாவது 2012 ஆம் ஆண்டுக்குள் இக்கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

சேவைக்காக வருடந்தோறும் 0.3 சதவீத வட்டியும் 300 பங்குகளுக்கு ஒரு சதவீத வட்டியும் மேலதிக பங்குகளுக்கு 2 சதவீத வட்டி வீதமும் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.இதேவேளை கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கை நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா டெலிகொம் தனியாருக்கு விற்க வேண்டி ஏற்பட்டது.இலங்கை காப்புறுதி நிறுவனத்தை தனியார்மயப்படுத்தல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இம்முறை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடன் உதவி கிடைக்கப்பெற்றிருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாணய நிதியம் மத்திய வங்கிக்கே இக்கடன் தொகையை வழங்கியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு இல்லையென வலியுறுத்திய ஆளுநர் இந்நிதி வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தியில் நேரடி பங்களிப்புச் செலுத்தாது எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர் முகாம்களுக்கு நேற்று அமெரிக்க உதவிச் செயலர் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க புலம்பெயர் அகதிகளுக்கான மக்கள் பணிமனையின் உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி. ஸ்வாட்ஸ், நிவாரணக் கிராமங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை நேரில் கண்டு திருப்தி தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டறிவதற்கென இலங்கை வந்திருக்கும் உதவிச் செயலாளர் எரிக் டி. ஸ்வாட்ஸ், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர், நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட உள்ளிட்ட குழுவினர் சகிதம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தனர்.வவுனியா மெனிக்பாமில் வைத்து மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அமெரிக்க உதவிச் செயலாளர் மற்றும் குழுவினரை வரவேற்றார்.

இவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது, நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ரிசாட் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ஆகியோர் உதவிச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.உதவிச் செயலாளர் எரிக் பி ஸ்வார்ட்ஸ் அனைத்து நிவாரணக் கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களுடனும் நேரடியாக உரையாடினார்.குறிப்பாக சுகாதார வசதிகளிலேயே கூடுதல் கவனம் செலுத்திய அமெரிக்க உதவிச் செயலாளர் அங்கிருக்கும் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியருடனும் உரையாடினார்.

அருணாச்சலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்கள், தாங்கள் தமது சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவதையே விரும்புவதாக அமெரிக்க உதவிச் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர், உலகம் முழுவதிலுமுள்ள இடம்பெயர்ந்த மக்களின் ஆசை இதுதான்.நீங்கள் விரைவில் மீளக்குடியமர்த்தப்பட வாழ்த்துவதுடன் அதற்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அமைச்சர் ரிசாத்திடம் கூறியுள்ளார். (தினகரன் 27-07-2009)

பேருவளை கோஷ்டி மோதல்:சம்பவத்துடன் தொடர்புடைய 28 பேர் மஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்

பேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என் சந்தேகிக்கப்படும் 28 பேர் நேற்று களுத்துறை மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இரு கோஷ்டிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் 26 பேர் அளுத்கமவிலும் இரண்டு பேர் பேருவளையில் வைத்தும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 28 பேரும் நேற்று களுத்துறை மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். மோதல் இடம்பெற்ற பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர்.இப்பகுதியில் தற்போது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதுடன் மக்கள் வழமைபோல் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதனைக் காணமுடிவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.இதேவேளை நேற்று காலை 10 மணிமுதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(தினகரன் 27-07-2009)

பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதி பிரதமர் நாளை இலங்கை வருகை; விஷேட வரவேற்பு

பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் நாளை இலங்கை வருகின்றனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்களது வருகையையொட்டி கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.பஹ்ரேன் பிரதமர் செய்க் கலீபா பின்சல்மான் அல்கலிபா எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அன்றைய தினம் பல இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை வரும் பஹ்ரேன் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்கலிபா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சு நடத்துவார். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன. (தினகரன் 27-07-2009)