Wednesday, March 31, 2010

சிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்;1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு


புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர் களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக் கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேரா ளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிட மும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்.
THURSDAY, APRIL 01, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, March 30, 2010

குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் பலி:வெலிகமவில் சம்பவம்



வெலிகமவில் சங்கீத நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொட்டவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. எல். எம். ஏ. திலங்க (21) எனும் இளைஞரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

இசை நிகழ்ச்சியில் பாட்டொன்றை மீளப்பாடுவதற்கு இடமளிக்காமையே மோதல் ஏற்படக் காரணமாகும். படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்கள் பற்றிய விவரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
TUESDAY, MARCH 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, March 29, 2010

சாவகச்சேரி மாணவன் கடத்திப் படுகொலை:ஒருவர் கைது; மற்றொருவரை தேடி வலைவிரிப்பு



சாவகச்சேரியில் மாணவரொருவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சூத்திரதாரியை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

ஒருகோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த க.பொ.த. சாதாரணதர மாணவனான அருள்விநாயகம் கபில்நாத் என்பவரே இவ்வாறு கடத்தி கொலை செய்யப்பட்டவராவார்.

கப்பம் கோரி குறித்த மாணவன் இனந்தெரியாத குழுவினரால் இருவாரங் களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் இவர்கள் மீது நடத்திய தீவிர விசாரணைகளின் பயனாக அவர்களுள் ஒருவரினால் வழங்கப்பட்ட வாக்கு மூலத்துக்கமையவே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாவகச்சேரி நீதவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சங்கத்தானை டச் வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமிருந்து குறித்த மாணவன் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போதே சடலம் அங்கே புதைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சடலம் மீட்கப்பட்டதையடுத்து தகவல் வழங்கிய மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சூத்திரதாரியை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.
MONDAY, MARCH 29, 2010லக்ஷ்மி பரசுராமன்

குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர் நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை



குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தினக ரனுக்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர் கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் நோய்வாய்பட்டிருப்போருக்கு விசேட சிகிச்சையளிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 66 பணிப்பெண்களும் 04 ஆண்களுமே இன்று நாடு திரும்புகின்றனர்.
இவர்களுள் ஒருவர் புற்றுநோயினால் பாதி க்கப்பட்டவ ரெனவும் இவரை வைத்தியசாலை யில் அனுமதித்து சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பணியகம் செய்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
MONDAY, MARCH 29, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, March 26, 2010

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம்:வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடு ம்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
SATURDAY, MARCH 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் ‘பல்லூடக பிரிவு’ - ஆணையர் நேற்று அறிவிப்பு



பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங் களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோக த்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்த னர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோக த்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென் றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப் பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப் பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங் களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையா ளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண் காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.
SATURDAY, MARCH 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம்:மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை


சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் ‘எம். வி. டல்கா’ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முக வர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்த மான மேற்படி ‘எம். வி. டல்கா’ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர் களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடு க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
SATURDAY, MARCH 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, March 25, 2010

ஊ.சே. நிதிய உறுப்பினர் நிலுவைகளுக்கு 13.75 வீதமாக வட்டி அதிகரிப்பு



ஊழியர் சேமஇலாப நிதியம் 2009இல் அதன் உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னெப்போதும் இல்லாத வகையில் 13.75 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக வாழ்க்கைத் தொழில், தொழில் உறவுகள் அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன நேற்று தெரிவித்தார்.

இது, அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.55 சதவீத அதிகரிப்பாகு மெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் ஊழியர் சேமஇலாப நிதிய நிலுவைகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வட்டி வீதத்தினை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது. இம் மாநாட்டில் அமைச்ச ருடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சின் செயலாளர், ஊ. சே. நி. ஆணையாளர், ஊ. சே. நி. சுப்ரின்டன்ட், மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


கடந்த 50 வருட காலமாக இயங்கி வரும் ஊழியர் சேமஇலாப நிதியத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. அந்த வகையில் சிறப்பாக இதன் நிர்வாகம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. தமது சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் பிரஜைகள் பெறுமதியடைய வேண்டும் என்ற நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டிலுள்ள நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அன்று 12 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் சேமஇலாப நிதியத்தில் தற்போது 769 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நிதியத்தில் 2.3 மில்லியன் உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பது அதன் மீதான நம்பிக்கையினை அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.


இதேவேளை, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கை யில் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், ஊழியர் சேமஇலாப நிதியத்தில் வைப்பி லிடப்படும் நிதியானது பரந்தளவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுடன், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகரித்திருப் பதாலும், நிர்வாக செயற்பாடுகளுக்கான செலவீனம் குறைந்திருப்பதாலும் முன் னொருபோதும் இல்லாத வகையில் அதி உயர் வட்டி வீதத்தை வழங்கக்கூடிய தாகவிருக்குமென்றும் தெரிவித்தார்.மேலும் 2009 ஆம் ஆண்டின் நிலுவைக் கான வட்டி வீதமான 13.75 சதவீதத்தை அவ்வருடத்துக்கான 3.4 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது, அதன் உறுப்பினர்கள் பெறும் வட்டியின் அவ் வருடத்துக்கான உண்மைப் பெறுமதி 10.01 சதவீதமாகுமெனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.இச்செய்தியாளர் மாநாட்டில் முன்னெடுக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.ஊழியர் சேமஇலாப நிதியத்திலுள்ள தனது கணக்கிருப்பை ஒருவர் கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் சேவை யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.ஊழியர் சேமஇலாப நிதியத்தின் காரியாலயத்துக்கு வரும் ஒருவருக்கு கூடிய விரைவில் அவருக்கு தேவையான வசதிகள் மற்றும் அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படுகிறது. ஒரு வரது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கை விரல் அடையாளம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது.இதேவேளை, எதிர்காலத்தில் ஒருவர் தனது வீட்டிலிருந்த வண்ணம் நேரடி இணையத்தள சேவையின் மூலம் தனது தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.சுய தொழிலில் ஈடுபடுவோரை ஊக்கு விக்கும் வகையில் விசேட சேமஇலாப நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.ஓய்வுபெற்றவர்கள் ஊழியர் சேமஇலாப நிதியப் பணத்தை கோல்டன் கீ போன்ற ஏமாற்றும் நோக்கமுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதனை தவிர்ப்பதற்காக அதே நிதியத்தில் மீள் வைப்பிடும் முறைமையை ஆரம்பிக்க தீர்மானித் துள்ளோம். இதற்கு 10 சதவீத வட்டி வழங்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.அதேவேளை, எதிர்காலத்தில் குளறுபடி களையும் கால தாமதத்தையும் தவிர்ப்பதற்காக ஊ. சே. நி. இலக்கமாக அவரவரின் தேசிய அடையாள அட்டை இலக்கமே நடை முறைக்கு கொண்டுவரவிருப்பதனையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.மேலும் வெளிநாடுகளில் தற்போது 20 இலட்சம் இலங்கையர்கள் வசித்து வருவதனால், அவர்களையும் ஊ. சே. நிதியத்தில் பணத்தை வைப்பிலிடச் செய்யும் வகையில் இலங்கை மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதன் ஆளுநர் கப்ரால் மேலும் கூறினார்.
THURSDAY, MARCH 25, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, March 23, 2010

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மக்களுக்காக 3700 வீடுகள் 2 ஆயிரம் வீடுகளை புனரமைக்கவும் திட்டம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போருக்காக 3700 வீடுகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டி ருப்பதாக மாவட்ட செயலகத்தின் திட்ட மிடல் பணிப்பாளர் திருமதி செல்வராஜா தெரிவித்தார். இதேவேளை மோதல்களின் போது சேதமடைந்த 2 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவ ட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் இடம்பெயர்ந்தோருக்கு பல்வேறு உதவி களைச் செய்யவுமென முன்வந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 15க்கு ஜனாதிபதி செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் யுஎன். ஹெபிட்டாட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நர்ட் ஆகிய தன்னார்வு நிறுவனங்களே வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளன.
TUESDAY, MARCH 23, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, March 22, 2010

வன்முறையில் ஈடுபட்ட 65 பேர் கைது ; பொலிஸ் நிலையங்கள் உஷார் நிலையில்:கட்அவுட்டுக்களை அகற்றும் பணி 80% பூர்த்தி 150 பேரை தேடி வலைவிரிப்பு



தேர்தல் காலத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதனால், தேர்தல் வன்முறைகள் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுக்க பொதுமக்கள் தயங்க வேண்டாமென தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண வேண்டுகோள் விடுத்தார்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர், ஈடுபட முயற்சிப்போர் ஒத்துழைப்பு வழங்குவோர் உள்ளிட்ட அனைவரும் கட்சி பேதம், பாரபட்சம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவரென பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கிடைத்துள்ள 143 முறைபாடுகளும் விசாரணைக்குட்படுத்தப் பட்டு வரும் அதே நேரம் அவற்றுடன் தொடர்புடையவர் களென சந்தேகிக்கப்படும் 65 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிடைத்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கமைய மேலும் 150 பேர் கைது செய்யப்பட விருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வலை விரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


சில வன்முறைச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று மாலை வரை 80 சதவீதமான சுவரொட்டிகள் கட்அவுட்கள் மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் எஞ்சியவற்றை துரிதகதியில் அகற்றுவதற்கு பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


அத்துடன் எதிர்வரும் தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்ற வகையில் வாக்களிப்பு நடத்தப்படும் அரச நிறுவனங்களில் பொலிஸ் பாதுகா ப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருப்பதுடன் அன்றைய இரு தினங்களும் விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் நடத்தப்படு மென்றும் அவர் குறிப்பிட்டார்.
MONDAY, MARCH 22, 2010லஷ்மி பரசுராமன்

தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள்



பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் சுமார் மூவாயிரம் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடு த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

}நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில், முன்னைய தேர்தல்களின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்ற மத்திய நிலையங்கள் மற்றும் அரசியல் நெருக்கடி காணப்படக்கூடிய இடங்களில் விசேட பிரதிநிதிகளை நேரில் அனுப்பவும் நடமாடும் கண்கா ணிப்புச் சேவையினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் கூறின.தெரிவு செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளைகள், பொலிஸ் நிலையங்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் உள்ளூராட்சி சபை நிறுவனங்கள் ஆகியவற்றில் தபால் மூல வாக்களிப்பினை கண்காணிப்ப தற்காக ஆயிரம் பேரை நியமித்திருப்பதாகவும் ஏனையோரை வேறு நிலையங்களுக்கு பயன்படுத்தவிருப்பதாகவும் பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
MONDAY, MARCH 22, 2010லக்ஷ்மி பரசுராமன்

வாகன விபத்துகளில் அறுவர் பலி


நாட்டின் வெவ்வேறு இடங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

மாரவிலை, பண்டாரவளை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவருர் உயிரிழந்திருக்கும் அதேவேளை மாத்தளை, அம்பலாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் கொல்லப்பட்டிருப்ப தாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மாரவிலையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்றின் சாரதி நித்திரை கொண்டதன் காரணமாக எதிரே வந்த லொறியொன்றுடன் மோதுண்டதில் சாரதியின் மனைவி உயிரிழந்துள்ளார். இவர் கொஸ்கஸ் சந்தியைச் சேர்ந்த சத்துரிக்கா நிரஞ்சலா பெர்ணாந்து (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த வான் சாரதி மாரவிலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இதேவேளை, நேற்று அதிகாலை பண்டாரவளை பெரகலை வீதியில் லொறியொன்று பாதையை விட்டு குடை சாய்ந்து பள்ளத்தில் விழுந்ததில் லொறிச் சாரதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிரு ப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தம்புள்ளையிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற வானொன்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். தெல்தெனிய (இ. போ. ச) டிப்போவின் முகாமையாளரும் அவரது மகனுமே உயிரிழந்துள்ளனர். வான் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சூரியவெவ பிரதான வீதியில் புதிதாக மின்கம்பங்கள் பொருத்தும் வேளையில் இருவர் ஈடுபட்டிருந்தவேளை சீமெந்து மூடைகளை எற்றி வந்த லொறியொன்று மின்கம்பங்களை மோதியதில் அவை உடைந்து வீழ்ந்ததில் அதில் நின்று வேலை பார்த்த இரண்டு இளைஞர்களும் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
இருவரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருப்பதாக கூறிய பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
MONDAY, MARCH 22, 2010லஷ்மி பரசுராமன்,

Friday, March 19, 2010

கடன் வழங்கிய எந்தவொரு நாடும் தவணைப் பணம் உரிய நேரத்தில்b வழங்கவில்லையென முறையிட்டதில்லை நிதியமைச்சின் செயலாளர் ஐயசுந்தர


இலங்கைக்கு கடன் வழங்கிய எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ தவணைப் பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை யென இதுவரை முறைப்பாடு செய்ததில்லை. இது எமது நாட்டிற்குரிய சிறப்பம்சமாகுமென நிதியமைச்சின் செயலாளர் டி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புக்களிடமிருந்து சட்டத்துக்கு முரணான வகையில் பெருமளவு கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாது திண்டாடுவதாக எதிர்க் கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் செய்தியை முழுமையாக மறுத்த பின்னரே செயலாளர் டி.பி. ஜயசுந்தர மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

எந்தவொரு நாடோ நிறுவனமோ சட்டத்துக்கு முரணான வகையில் கடனை வழங்கவும் முடியாது, அதனை நாம் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

எடுக்கப்பட்டிருக்கும் கடனுக்கான தவணைப் பணம் உரிய முறையில் செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் எந்தவொரு திண்டாட்டமும் கிடையாது. 1955 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருமானத்தை விட செலவீனம் அதிகரித்தே உள்ளது. நீண்டகால சுமார் 20 வருட அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலேயே நாம் கடன் பெற்றுள்ளோம்.

இவை தவணை முறையில் செலுத்தப்படும்பேது எந்தத் திண்டாட்டமும் ஏற்பட சாத்திய மேயில்லை. இந்நிலையில், ஒரு வருடத் துக்கான வருமானத்துடன் நீண்டகாலத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை ஒப்பிட்டு அரசாங்கத்தை குறை கூறுவதில் அர்த்தமில்லை. அரசாங்கத்தின் கடனில் 80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். அரசாங்க வங்கிகள் மற்றும் ஊழியர் சேம லாப நிதியம் என்பவற்றினூடாக பெறப்படும் நிதியினூடாகவே நாட்டில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக உரிய நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் நிதியை நாம் கொடுக்காமலில்லையெனவும் செயலாளர் ஜயசுந்தர தெரிவித்தார்.
நாம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனும் நாட்டின் அபிவிருத்திக்காகவே. உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகள் முழுமை பெற்றதும் அதற்காக செலவிட்ட தொகையிலும் மும்மடங்கை எம்மால் வருமானமாக பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த மூன்றாம் தவணைக்குரிய பணம் தாமதித்ததிற்கான பிரதான காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும். தற்போது ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் இருப்பதனால் இந்தத் தாமதம் குறித்து தாம் கவலையடையத் தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
FRIDAY, MARCH 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, March 17, 2010

15,000 கறவை பசுக்கள் ஆஸியிலிருந்து இறக்குமதி


அவுஸ்திரேலியாவிலிருந்து 15 ஆயிரம் கறவை பசுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கால்நடை அபிவிருத்தியமைச்சின் செயலாளர் சுனிமல் சேனாரத்ன நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக 4 ஆயிரம் கறவைப் பசுக்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இலங்கைக்குக் கொண்டு வரப்படுமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சில் நேற்று முன்தினம் மாலை கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நமது நாட்டைச் சேர்ந்த ஒரு கறவைப் பசுவானது நாளொன்றுக்கு 3 தொடக்கம் 5 லீற்றர் வரை பால் தரும் அதே சமயம் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பசுவானது நாளொன்றுக்கு 40 தொடக்கம் 50 லீற்றர் வரை பால் தரக்கூடியது.

இத்தகைய பசுக்களை நம் நாட்டுக்கு எடுத்து வருவதன் மூலம் தேவையான பால் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வெளிநாட்டிலிருந்து பால்மா இறக்குமதியை நாடளவில் குறைப்பதே எமது இலக்காகும். அதற்கு ஏற்ற வகையில் 2015 ஆம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் கறவைப் பசுக்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2005 ஆம் ஆண்டு முதல் 86 சதவீத பால் உற்பத்தி உள்நாட்டில் நடைபெறுவதுடன் 14 சதவீதமே இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

THURSDAY, MARCH 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

கோழி இறைச்சியின் விலையை ரூ. 350க்கு நிர்ணயிக்க அரசு தீர்மானம்



கோழி இறைச்சியின் விலையை (கிலோவுக்கு) 350 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கால்நடை அபிவிருத்தியமைச்சின் செயலாளர் சுனிமல் சேனாரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ கோழி இறைச்சியின் உற்பத்திச் செயலவு 340 ரூபாவாக இருந்த போதும் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் தலையிட்டு கிலோவொன்றின் விற்பனை விலையை 350 ரூபாவாக நிர்ணயித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ப்ரொயிலர் கோழி ஒன்று இறைச்சிக்கு தயாராகும் வரை அதற்கான விற்றமின், மருந்து மற்றும் ஊசிக்கான செலவுகள் அதிகமாகையால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விலை நிர்ணயத்தை கையாள வேண்டியிருப்பதாக வும் அவர் குறிப்பிட்டார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நுகர்வோரின் தேவைக்கேற்ற வகையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் உற்பத்தியளவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் அதேவேளை நுகர்வோரின் தேவை ஈடுசெய்யப்பட முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவற்றை இறக்குமதி செய்ய தயாராகவிருப்பதாகவும் செயலாளர் சுனிமல் சேனாரத்ன கூறினார்.

வடக்கு, கிழக்கில் மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து நாடளாவிய ரீதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் நுகர்வுப் பெறுமானம் அதிகரிக்கப்பட்டி ருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட 9500 மெற்றிக்தொன் நிறைகொண்ட கோழி இறைச்சி தற்போது 11 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
THURSDAY, MARCH 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, March 15, 2010

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி:திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸார் இடைநிறுத்தம்


பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருமலை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முதல் தமது சேவையிலிருந்துஇடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று அவரது வீட்டுக்கு சென்றிருந்த வேளை குறித்த நபர் வீட்டுக்குள்ளிருந்த வண்ணம் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தொடர்ந்தும் அந்நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்த முயன்றதையடுத்தே பொலிஸார் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்திய பதில் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய, திருமலையில் இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆராய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திருமலையில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணை முடிவுகளுக்கமைய பக்கச்சார்பற்ற முறையில் தான் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பேனென்றும் இதன் போது பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார். விசாரணையின் வசதி கருதியே சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மேற்படி நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
TUESDAY, MARCH 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

வவுனியா வடக்கு;மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சாரம்



வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதன்படி கணேசபுரம், ஓமந்தை,
நொச்சிமோட்டை, கட்டான்குளம் உள்ளிட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாரம் முதல் மின் இணைப்பை பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களுள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கே இலவச மின் இணைப்பு வழங்கப் படுகிறது.

வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிர தேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் தற்போது 500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுள் குறித்த திகதிக்கு பின்னதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கும் சுமார் 200 குடும்பங்களே இலவச மின் இணைப்பை பெறவுள்ளன.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 200 செயற் திட்டங்களுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் 14 செயற்திட்டங்களே பொதுமக்களின் இவ்வாரம் முதல் கையளிக்கப்படவிருப்பதாகவும் அரசாங்க அதிபர் நேற்றுத் தெரிவித்தார்.
MONDAY, MARCH 15, 2010லக்ஷ்மி பரசுராமன்

இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பெருமளவு கிராக்கி:27 நாடுகளுடன் தொழில்வாய்ப்பு ஒப்பந்தம்


இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி நிலவுகிறது.

இவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இதுவரை 27 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தற்போது பணியாற்றி வரும் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களினால் வருடாந்தம் 13 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வருகின்றது.

இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இங்கிலாந்து
, ஹொங்கொங், சிங்கப்பூர், பெங்கொக், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை கடற்பணியாளர்களுக்கு கிராக்கி இருக்கும் அதேவேளை குறிப்பாக இந்தியா, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலேயே அதிக கிராக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையில் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் நாட்டின் ஆறு நிலையங்களில் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கப்பலில் திருத்தங்களை மேற்கொள்ளல், கொள்கலனிலிருந்து பொருட்களை அப்புறப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த பாடத் திட்டத்தினூடாக பயிற்றுவிக்கப்படவுள்ளன.
MONDAY, MARCH 15, 2010லக்ஷ்மி பரசுராமன்

Saturday, March 13, 2010

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலைய நிர்மாணப் பணிகள்...2 இலட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு



அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் நிர்மாணப் பணிகள் மூலம் சுமார் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் பொரு ளாதாரம் இரண்டு மடங்காக உயர்த்தப்படவிருப்பதாக துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. வி. பி. ரஞ்சித் த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினூடாக 26,500 பேர் நேரடியாகவும் 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் துறைமுக மற்றும் விமான நிலையங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தற்கால திட்டங்கள் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.


இதில் கருத்துத் தெரிவித்த இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரம கூறுகையில், அம்பாந்தோட்டை துறைமுக கட்டமானப் பணிகள் 04 கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டம் குறித்த திகதியிலும் 12 மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் நவம்பர் முதல் துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.


அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்படவிருப்பது அறிய வந்தது முதல் இதுவரை 24 முதலீட்டாளர்கள் அங்கே முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.


நாட்டில் பயங்கரவாதம் இருந்ததனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வர மாட்டார்களென பலரிடம் நிலவி வந்த கருத்தினையும் முடக்கும் வகையில் இன்று முதலீ ட்டாளர்கள் எமது நாட்டை த்தேடி வருவது பெருமைக்குரிய விடயமா கும்.
அம்பாந்தோட்டை பிரதேசமானது சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய இடத்திலுள்ளது. தினந்தோறும் 200 தொடக்கம் 300 வரையான கப்பல்கள் எமது நாட்டிற்கு வராமல் அம்பாந்தோட்டையூடாக செல்கின்றன. வருடத்துக்கு 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான கப்பல்கள் இவ்வாறு செல்கின்றன.


இதில் ஆகக் குறைந்தது 15 தொடக்கம் 20 சதவீதத்தினை இத்துறைமுகத்தினூடாக வரவழைப்பதன் மூலம் எமது நாட்டில் போதிய அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.


மேலும் இத்துறைமுகத்தினூடாக நேரடியாக 25 ஆயிரம் பேரும் மறைமுகமாக 2 இலட்சம் பேரும் தொழில்வாய்ப்பினை பெறுவர்.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் செயற்திட்டம் இம்மாத இறுதிக்குள் முழுமைப்படுத்தப்படும் வகையில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கே ஒரே தரத்தில் 10 கப்பல்களை நங்கூரமிடமுடியும். விரிவுபடுத்தும் திட்டம் முழுமைபெற்றதும் ஒரேநேரத்தில் 90 கப்பல்கள் நங்கூரமிடமுடியும்.


இதேவேளை, உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் காலி துறைமுகமும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் ஒலுவில் துறைமுகமும் சுதந்திர வர்த்தக வலயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமலை துறைமுகமும் உள்நாட்டு உற்பத்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் விதமாக காங்கேசந்துறை துறைமுகப் புனர்நிர்மாணப்பணிகளும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் கூறினார்.


இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் கமல் ரத்வத்த பேசுகையில், 2012 ஆம் ஆண்டு நவம்பர் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் மத்தள விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் 10 விமானங் கள் நிறுத்தி வைக்க கூடிய வகையில் மிகவும் விசாலமாக அமைக்கப்படும் இவ்விமான நிலையத்தில் எ 318 ரக எயார்பஸ் தலையிறங்க கூடிய வகையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1500 பேர் நேரடியாகவும் 5 ஆயி ரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
SATURDAY, MARCH 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

மிஹின்’ லங்கா சேவை இலாபத்தில்:மேலுமொரு விமானத்தை கொள்வனவு செய்யத் திட்டம்



மிஹின் லங்கா விமான சேவை கடந்த மூன்று மாதங்களுக்குள் அதி கூடிய இலாபம் கண்டிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார்.

கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களில் 300 சதவீத இலாபம் அடைந்ததன் மூலம் தமது வாக்குறுதியை காப்பாற்றி யுள்ளோமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இத னைத் தெரிவித்தார்.

மிஹின் லங்காவின் பிரதான குறிக் கோள் தலயாத்திரிகர்களுக்கும் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக்கும் கு¨ றந்த செலவில் சேவை வழங்கு வதாகும்.
எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிதாக இன் னொரு விமானத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம்.

அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் விமானச் சீட்டின் கட்டணத்தை 10 தவணைகளில் செலு த்துவதன் மூலம் வெளிநாடொ ன்றுக்கு பயணம் செய்யலாம். இந்த சலுகையை இராணுவ வீரர்களுக்கும் வழங்கவுள்ளோம் என அவர் தெரி வித்தார்.


இதேவேளை பேங்கொக்கிலு ள்ளவர்களை சலுகையடிப்படையில் இலங்கைக்கு அழைத்து வரும் திட்டமொன்றினை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
SATURDAY, MARCH 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

தெற்காசியாவில் மிகச் சிறந்தாகத் தெரிவு


கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் தெற்காசியாவில் மிகச் சிறந்த விமான நிலையங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக விமன நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் கமல் ரத்வத்த நேற்றுக் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விமான சேவைகள் தொடர்பான அதிகாரிகளின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே மிகச் சிறந்ததாக கருதப்படும் மூன்று விமான நிலையங்களுள் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் தெரிவாகியுள்ளது. துபாயில் அண்மையில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் நிகழ்வுக்கு எமக்கும் அழைப்பிதழ் கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைய ¡ளரான ஸ்ரீ மந்தக்க சேனாநாயக்க கூறுகையில்;

மத்தளவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஒப்பானதாக அமையும். அதேவேளை சீனாவின் பீஜிங் மற்றும் செங்ஹை ஆகிய இடங்களுக்கும் இந்தோனேசியாவின் ஜகர்த்தாவுக்கும் ஸ்ரீ லங்கனின் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி. எஸ். வித்தானகே கூறுகையில், எமிரேட்ஸ் வசமிருக்கும் ஸ்ரீ லங்கனுக்கு சொந்தமான 43 பங்குகளையும் மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் தற்போது 12 எயார்பஸ்களேயுள்ளன. இதன் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

பாரிய எயார்பஸ்களான ஏ340, ஏ320 ஆகிய பஸ்களை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ¤க்காக பெற்றுக்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.
வாரத்துக்கு மூன்று தடவைகள் டோக்கியோ சென்று வரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவையினை வாரத்துக்கு 07 தடவைகளாக கூட்டுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு விமான சேவைகள் மூலம் கிடைக்கும் 2.6 மில்லியன் வருமானத்தில் ஆகக் குறைந்தது 55 சதவீதத்தை ஸ்ரீலங்கன் எயார்லை ன்ஸினூடாக பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு எனவும் குறிப்பிட்டார்.
SATURDAY, MARCH 13, 2010(லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, March 10, 2010

பிரி. வெளிவிவகார உதவிச் செயலர் அமைச்சர் போகொல்லாகமவுடன் சந்திப்பு

மோதல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நாட்டில் அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலங்கை வந்திருக்கும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ்சிடம் கோரியுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ரிக்கட்ஸ் நேற்றுக் காலை அமைச்சர் போகொல்லாகமவை அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடினார்.

இதன்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன உதவ முன்வர வேண்டுமெனவும், அவை மக்களின் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சரியான முறையில் செலவிடப்படுகின்றனவா என்பது குறித்து மேற்பார்வை செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
THURSDAY, MARCH 11, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, March 9, 2010

கூடுதல் விலையில் அரிசி விற்பனை:நாடு முழுவதும் இன்று முதல் திடீர் முற்றுகை நடவடிக்கை


விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் வகையில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக வர்த்தக விவகார நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முற்றுகை நடவடிக்கையின் போது நிர்ணய விலையிலும் பார்க்க கூடிய விலைக்கு அரிசி விற்பனை செய்யும் எவரும் எவ்வித தராதரமும் கட்சி பேதமுமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதியெனவும் அமைச்சர் பந்துல கூறினார்.


அனைத்து மாவட்டங்களிலுமுள்ள நுகர்வோர் அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் முற்றுகையிடும் பணியில் இன்று முதல் தீவிரமாக இறங்கவிருப்பதனால் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பதுடன், போதுமான அளவு வாகன வசதிகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு பணித்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தகவல் தொடர்பாடல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு வரைக்கும் தேவையான அரிசி எம்மிடம் கையிருப்பில் உள்ளது. சில வர்த்தகர்கள் பண்டிகைக் காலத்தை காரணம் காட்டி அரிசியை நிர்ணய விலையிலும் பார்க்கக் கூடிய விலைக்கு அதனை விற்பனை செய்து வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துளளன.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் நிலையங்களை தராதரம், கட்சி பேதமின்றி முற்றுகையிட்டு சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த வருடம் மாத்திரம் அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நிலையங்களிலிருந்து சுமார் 22 இலட்சம் ரூபா வரை தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைத்து வகையான அரிசியும் நுகர்வோர் கொள்வனவுக்காக தேவையானவரை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு ள்ளது. மொத்த விற்பனை விலையடிப்படையில் சம்பா ஒரு இலூகிராம் 63 ரூபாவாகவும், ஸ்டிம் நாடு 52 ரூபாவாகவும், பச்சை அரிசி 47 ரூபாவாகவும்,
வாசுமதி சம்பா 64 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை விவசாயிகளிடமிருந்து 28ம் திகதி முதல் ஒரு கிலோ அரிசியை 30 ரூபாவுக்குக் கொள்வனவு செய்து அதனை ஆகக் கூடியது 70 ரூபாவுக்கு விற்பனை செய்வதனையே நாம் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றோம்.
அரிசி போதுமானவரை கையிருப்பில் இருப்பதனால் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்நிலையில், கூடுதல் விலையில் விற்பனை செய்ய முனைவோரை சட்டத்துக்கு முன் நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோமெனவும் அமைச்சர் கூறினார்.
WEDNESDAY, MARCH 10, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, March 8, 2010

மல்லாவியில் 1000 வீடுகளை நிர்மாணிக்க மார்டின் லூதர் கிங் III நிதியம் இணக்கம்:வீட்டுக்கு தலா 5 ஆயிரம் அமெரிக்க டொலர்



முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் ஆயிரம் வீடுகளை அமைக்க மார்டின் லூதர் கிங் யியியி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த மார்டின் லூதர் கிங் யியியி தலைமையிலான குழுவினரை மதத் தலைவர்கள் சந்தித்த வேளை, ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ஆர். பாபு சர்மா மல்லாவியில் ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தினை ஏனைய மதத் தலைவர்களுடன் இணைந்து முன்வைத் திருந்தார்.

இதற்கமைய மீண்டும் இலங்கை வந்துள்ள மார்டின் லூதர் கிங் யியியி இன் அந்தரங்க செயலாளர் ஜோனி. ஜே. மெக் மற்றும் தென்னாசிய பகுதிக்கான இணைப்பாளர் திருமதி மனேஸ்கா இளையதம்பி ஆகியோர், மல்லாவியில் ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு தலா 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வீதம் ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதுடன் இவ்வீடமைப்புத் திட்டத்துக்கென பிரத்தியேக குடிநீர் வசதி சமாதான ஒன்றுகூடல் மண்டபம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்நிதியம் சம்மதித்திருப்பதாக பிரம்மஸ்ரீ ஆர். பாபுசர்மா கூறினார்.
MONDAY, MARCH 08, 2010லக்ஷ்மி பரசுராமன்

தற்கொலை அங்கிகள், சக்திமிக்க குண்டுகள் மீட்பு:வவுனியா கந்தசாமி நகரில் சம்பவம்


வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரிலிருந்து அதி சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த இரு தினங்களாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பயனாகவே இவை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


தேடுதலின் போது நான்கரை கிலோ கிராம் நிறைகொண்ட குண்டு, 06 – கிரனேற் கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ கிராம் மற்றும் ஒரு கிலோவும் 200 கிராம் நிறையும் கொண்ட இருவேறு தற்கொலை அங்கிகள், 04, டெட்டனேட்டர்கள், 02 டோச்கள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
MONDAY, MARCH 08, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, March 1, 2010



பாராளுமன்றத் தேர்தலுக்கென ஆசிய நாடுகளில் இருந்து 50 தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பெப்ரல் அமைப்புக்கு அனுமதி வழங்கியிருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண தினகரனுக்குத் தெரிவித்தார்.

அதற்கமைய தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை நாடளாய ரீதியில் பணியில் அமர்த்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான விசேட பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணுவதில் கலந்து கொள்வதற்கு பெப்ரல் அமைப்பு பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்வைத்திருப்பதாகவும் பணிப்பாளர் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அடையாள அட்டையில்லாதவர்கள் கிராம சேவகர்களை தொடர்பு கொள்ளுமாறும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
MONDAY, MARCH 01, 2010லக்ஷ்மி பரசுராமன்

விருப்பு இலக்கம் வழங்கும் பணி மும்முரம்


பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் நிறைவு பெறவில்லை.

கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் மாவட்ட ரீதியாக தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, MARCH 01, 2010லக்ஷ்மி பரசுராமன்

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸார்


பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மூலத்துக்கமைய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


நாடு முழுவது முள்ள 40 பொலிஸ் வலயங்களிலும் 413 பொலிஸ் நிலையங்களினூ டாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தேர்தல்களுக்கான பொலிஸ் ஊடக பேச்சாளர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
MONDAY, MARCH 01, 2010லஷ்மி பரசுராமன்