Tuesday, September 28, 2010

லலித் கொத்தலாவலயின் வங்கி பெட்டகத்திலிருந்து பெருந்தொகை நகைகள்


லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவிக்குச் சொந்த மான 60 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதிமிக்க தங்க நகைகள் மற்றும் பல மாணிக்க கற்களையும் இரகசியப் பொலிஸார் நேற்று கொழும்பிலுள்ள பிரபல அரச வங்கியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரகசியப் பொலிஸார் குறித்த வங்கியின் பெட்டகங்களை சோதனையிட்ட போதே லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவியினால் பிரகடனப்படுத் தப்படாத மேற்படி நகைகளும் மாணிக்கக் கற்களும் மீட்கப்பட்டுள்ளன.

பெட்டகங்களில் இருந்து பெருந் தொகையான தங்க ஆபரணங்களு டன் முத்து, இரத்தினம், மாணிக் கம் மற்றும் வைரக்கற்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன
TUESDAY, SEPTEMBER, 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 27, 2010

34 குடும்பங்கள் முல்லைத்தீவில் இன்று மீள் குடியமர்வு


வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் இன்று முல்லைத்தீவு மாவட் டத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள் ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி நிவாரணக் கிராமங்களிலுள்ள 283 குடும்ப த்தைச் சேர்ந்தோர் கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னர் நடைபெற்ற மீள்குடி யேற்றத்தை தவறவிட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்தோரை எதிர்வரும் 11 ஆம் திகதி தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் கூறினார்
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

மீள் குடியேற்றப்பட்டோருக்கு விசேட ஏற்பாடு:மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் கூடாரத்துணிகள், கூரைத்தகடுகள்


வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளோ ர்க்கு எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பாதுகாப்பான கூடாரங்களை அமைத்துக் கொடுப்பதற்கென வட மாகாண சபை 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதென மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் மீள்குடியேறியுள்ளோருக்கென 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மழைக் காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தற்காலிகமாக இந்தக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவிரு ப்பதாகவும் ஆளுநர் கூறினார்.
மோதல்களின் போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்கள் மற்றும் ஏனைய வெளி மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். துரிதகதியில் மீள் குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக அம்மக்களுக்கு பாதுகாப்பான கூடாரங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் அண்மையில் கொழும்பில் கூடி ஆராயப்பட்டது.

இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதாக இணக்கம் தெரிவித்திருக்கும் கூரைத் தகரங்களுக்கும் மேலதிகமாகவே வடமாகாண சபை இதற்கென 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய போதி யளவு கூரைத்தகரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் சீட்டுக்களைப் பெற் றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மீள்குடி யேற்ற அமைச்சு முன்னெடுத்து வருவதாக வும் அதன் செயலாளர் எஸ். திஸாநாயக்க கூறினார். இதற்குரிய நிதி கூடிய விரை வில் அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப் படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் மழைக் காலத்திற்கு முன்னதாக கூடா ரங்களைப் பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன்படி குடும்ப மொன்றுக்கு 12 கூரைத் தகடுகள் வீதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 20, 2010

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு: இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க நடவடிக்கை


வவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவு செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்திய அரசாங்கத் தினால் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர் மாணிக்கப்படவிருக்கும் 7 ஆயிரம் வீடுகளுக்குரிய பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நடைபெற்று வருகின்றன.

யுத்தத்தினால் தமது வீடுகளை இழந்தோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளி மாவட்டங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக விண்ணப்பப்படிவத் தினைப் பெற்று பூரணப்படுத்தி வேறு மாவட்டத்தில் தாம் வசிப்பதற்கான காரணத்தைத் தெளிவாக குறிப்பிட்டு அனுப்பிவைப்பதன் மூலம் அவர்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான வளமும் நிதியுதவியும் கிடைக்க வழி செய்யப் படுமென்பதால் தாமதியாது விண்ணப்பங் களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

இவை தொடர்பான அனைத்து மதிப் பீடுகளும் ஒக்டோபர் நடுப்பகுதியளவில் ஐரேப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்திருக்கும்1125 வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்ய இந்திய அரசாங்கம் முன்வந்திருப்பதனால் அதற்குரிய பயனாளிகளை தெரிவு செய் யும் விண்ணப்பப்படிவங்களும் விநியோகிக் கப்பட்டு வருகின்றன.

எமது தொழில்நுட்ப அலுவலககள் குறித்த வீட்டின் சேதம் தொடர்பாக சமர்ப்பிக்கும் கணக்கெடுப்புகளும் அடுத்த மாதமளவில் இந்திய அரசாங்கத்திடம் வழங்கப்படு மெனவும் அரச அதிபர் மேலும் கூறினார்.
MONDAY, SEPTEMBER, 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

புனர்வாழ்வு பெற்ற மேலும் 440 பேர் 30ம் திகதி உறவினரிடம் ஒப்படைப்பு


புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள மேலும் 440 பேர் எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் வைபவரீதியாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர தலைமை தாங்குவாரெனவும் ஆணையாளர் கூறினார்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையில் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது, அமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளு க்கமைய 119 பேர் இதன்கீழ் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் நூறு பெண்கள், அங்கவீனமானோர், சுகயீனமுற்றோர் மற்றும் முழுமையாக புனர்வாழ்வு பெற்று வேலை செய்ய தகுதி பெற்றோர் ஆகியோரே இம்முறை விடுவிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் புனர்வாழ்வு நிலையங்களி லிருந்து 500க்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, SEPTEMBER, 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, September 17, 2010

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்:5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்


பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
FRIDAY, SEPTEMBER, 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

Sunday, September 5, 2010

நியூசிலாந்தில் விமான விபத்து:இலங்கை விமானி உட்பட 9 பேர் பலி


நியூசிலாந்தில் நேற்று இடம் பெற்ற விமான விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமிந்த நளின் சேனாதீர என்ற விமானி கொல்லப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்த விபத்தில் விமானி உட்பட 9 பேர் கொல் லப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ‘ஸ்கெடைவிங்’ என்ற நிறுவன மொன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாயத்திலேயே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
பலியான வர்களில் நால்வர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் பிரிட்டன், அயர்லாந்து, அவுஸ் திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

SUNDAY SEPTEMBER 05 2010லக்ஷ்மி பரசுராமன்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம்:12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமாராவுடன் பேச்சு


தமிழ்க் கட்சிகள் அரங்கம் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை சந்தித்து 12 அம்ச கோரிக் கைகளை முன்வைத்தது. இந்திய இல்லத் தில் நேற்றுக்காலை சுமார் ஒரு மணித்தி யாலமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் அரங்கப் பிரதிநிதிகள் இந்திய வெளிவிகார செயலாளரிடம் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிக ளுடன் கூடிய மீள்கட்டுமானம், உயர்பாது காப்பு வலயம் மற்றும் இராணுவ முகாம் களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அதன் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர், இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவும். இதற்காக 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவிருப்பதாகவும் மலையக மக்களுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் கூறினார்
FRIDAY, SEPTEMBER, 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

எரியூட்டப்பட்ட நிலையில் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள்:கரியமுள்ளிவாய்க்காலில் மீட்பு


கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நேற்று இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சில விமான உதிரிப்பாகங்களை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் இடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் வழிகாட்டியதையடுத்தே விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று உதிரிப்பாக ங்களை மீட்டுள்ளனர்.

எரியூட்டப்பட்ட நிலையில் 02 சிறிய இயந்திரங்கள், லைட்கள், சக்கரங்கள் உள்ளிட்ட சில விமான உதிரிப்பாகங்களும் பற்றுச்சீட்டுப் புத்தகங் கள், தொலைபேசிகள், பற்றரி சார்ஜர்கள் ஆகிய பொருட்களும் குறித்த கொள்கலனி லிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை இலகுரக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களென தெரிவித்த விமானப்படை பேச்சாளர், படையினருக்கும் புலிகளுக்கும் மோதல் உக்கிரமாக நிலவிய காலத்தில் புலிகள் அவற்றுக்கு தீ வைத்திருக்கலாமென நம்புவதாகவும் கூறினார்.
THURSDAY, SEPTEMBER, 02, 2010லக்ஷ்மி பரசுராமன்