Monday, April 26, 2010

சட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் சூரியவெவ பகுதியில் பலி:பொறியியலாளர் குழு நாளை சூரியவெவ விரைவு




சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற்சித்த நால்வர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரகஸ்வெவ பிரதேசத்திலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சூரிய வெவ பிரதேசத்தைச் சேர்ந்த துஷார சம்பத், கொடிதுவக்கு, அமிதபால, ஜி. . குலரத்ன ஆகிய நால்வருமே உயிரிழந்துள் ளனர்.

பிரதான மின் கம்பத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற் சித்த வேளை மேற்படி நால்வரு க்கும் மின்சாரம் தாக்கியுள்ளது.

அதனையடுத்து அயலவர்களால் இந்நால்வரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். சிகிச்சைப் பயனின்றி நால்வரும் பின்னர் உயிரிழந்ததாக வும் பொலிஸ் பேச்சாளர் தெரி வித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர் பாக விசாரணைகளை நடத்துவத ற்காக மின்சார பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று நாளை சூரியவெவ செல்லவிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க தெரிவித்தார்.
MONDAY, APRIL 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

புதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம்:உடையார்கட்டில் நிலக்கண்ணிவெடி முழுமையாக அகற்றல்




முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். விஸ்வமடு உடை யார் கட்டு பிரதேசத்தினூடாக புதுக் குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

உடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத் துக்கு தயார் படுத்தப்பட்ட நிலையிலுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை மாவ ட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் இன் னும் இரண்டு மூன்று வாரங் களுக்குள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம் பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திருமதி இமெல்டா கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணி வெடிகள் அகற்றப்படும் ஒழுங்கி ற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன் னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மாவட்டத்தின் நகர பிரதேச சபைக்குள் மாத்திரம் இது வரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீளக் குடியே றியுள்ளார்கள்.

இதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள் குடியேற்றம் நடத்தப்பட்டு வருவ தாக மாவட்ட அராசங்க அதிபர் குறிப்பிட்டார்.
MONDAY, APRIL 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

கட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு



கட்டுகஸ்தோட்டை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

எஸ். எஸ். ஜி. 87 ரக 05 கைகுண்டுகள் அடங்கப் பெற்ற இரும்புப் பெட்டியொன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் யடிகலபல மஹதென்ன எனும் காட்டுப் பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள காடொன்றுக்குள்ளிலிருந்து பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி எல். எம். ஜி. கிரனேற் கைக்குண்டு உள்ளிட்ட சில வகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.


MONDAY, APRIL 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, April 23, 2010

கப்பம், கடத்தலுடன் தொடர்பு; மானிப்பாயில் மூவர் கைது




யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரி கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் பொலிஸாரால் நேற்று விடுவிக்கப்பட்டதுடன், கடத்தலுடன் தொடர்புடையவ ர்களென சந்தேகிக்கப்படும் மூவர் மானிப்பாய் பொலி ஸாரினால் கைது செய்யப்பட் டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

யாழ். மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துனர் ஒருவரும் கடந்த 20ஆம் திகதி இனந்தெரியாத கும்பலொன்றி னால் கப்பம் கோரி கடத் தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுப்பிரமணியம் மகேந்திரன் மற்றும் டி. மகேஸ்வரன் ஆகியோரை விடுவிப்பதாயின் 50 இலட்சம் ரூபா பணம் அல்லது 25 பவுண் நகையுடன் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக தர வேண்டுமெனவும் அக்கும்பல் கேட்டுள்ளது.

குடும்பத்தார் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் தீட்டிய திட்டத்தின் படி கப்பம் வழங்குவது போல சென்று சந்தேகநபர்கள் மூவ ரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
FRIDAY, APRIL 23, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, April 20, 2010

கிளிநொச்சி கிழக்கில் அடுத்தவாரம் மீள்குடியமர்வு



கிளிநொச்சி கிழக்குக்கான மீள்குடியேற்றப் பணிகளை அடுத்துவரும் ஒரு வாரகாலத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதற்தடவையாக எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக அவர் கூறினார். கிளிநொச்சி கிழக்கில் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது 2,900 குடும்பங்களை மீளக் குடியேற்றும் வகையில் அதற்கான ஒழுங்குகளை அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.

தற்போது அப்பகுதியில் திருவையாறு, கனகாம்பிகை குளம், ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
TUESDAY, APRIL 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, April 19, 2010

‘மாதா’ விவரண திரைப்பட விவகாரம்;குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் விசாரணைகள் ஒப்படைப்பு




வன்னியில் இடம்பெற்ற மனிதா பிமான நடவடிக்கையைச் சித்தரிக் கும் வகையில் தயாரிக்கப்பட்ட காதல் காவியமானமாதாவிவரணத் திரைப்படம் கணனியின் ஹார்ட் டிஸ்க் இலிருந்து முழுமையாக கள வாடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டிருப்பதாக பொலிஸ் வட் டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

கொழும்புகுற்றத்தடுப்பு பொலிஸார் இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, ஏனைய கணனிகளின் உதவியுடன் இழந்த படத்தொகு ப்பை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகர னுக்குத் தெரிவித்தார்.
MONDAY, APRIL 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Saturday, April 17, 2010

காதல் காவியம் 'மாதா' கணனியிலிருந்து திருட்டு:ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்





வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின்ஹார்ட் டிஸ்க்இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள் ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகச் சித்திரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அற்புதமானதொரு காதல் களவியமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விவரணச் சித்திரம் சர்வதேச விருதுக்கு போட்டியிடு வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருந்தமாத்தா’ (மாதா) என்ற இந்தச் சிங்கள விவரணச் சித்திரம் மிகவும் நுட்பமான முறையில் கணனியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து முழுமையாகக் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகரனு க்குத் தெரிவித்தார்.

முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சில இடங்களில் இராணுவ வீரர்களும் நடித்துள்ளனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டமாதாபடம் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய விவரணச் சித்திரமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் நான்கு கோடி ரூபா செலவில் சுமார் ஒரு வருட காலமாக வட மாகாணத்தில் வைத்து இது படமாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விருதில் போட்டியிடும் வகையில் இந்த விவரணச் சித்திரம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவரணச் சித்திரம் அடங்கிய சகல ஆவணங்களும் கொண்ட ஹார்ட் டிஸ்க் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் கூறினார்.

நாவலையில் அமைந்துள்ள அவர்களது, ‘ரூம் சினிமா கிரியேஷன்ஸ் ஹவுஸ்எனும் ஸ்டூடியோவில் வைத்தே திட்டமிட்ட சதிகார கும்பலொன்று கணனியிலிருந்து இதனை திருடிச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரணச் சித்திரமடங்கிய ஹார்ட் டிஸ்க் திருட்டுப் போன சம்பவம் குறித்து மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சந்தேக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள னர்.

இலங்கைக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் சில சதிக் கும்பல்கள் இதனைத் திருடியிரு க்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
SATURDAY, APRIL 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றம்:இம்மாத இறுதிக்குள் வவுனியாவில் குடியமர்வு




வுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவா ரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உற வினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோ ரையும் மேற்படி ஆறு கிராம சேவ கர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.
SATURDAY, APRIL 17, 2010லக்ஷ்மி பரசுராமன்)

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி பகுதியில் பொலிஸ், முப்படைகளின் பாதுகாப்பு:மீள்வாக்குப் பதிவுக்கான பிரசாரங்கள் இன்றுடன் முடிவு




நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் மீள்வாக்களிப்பில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 150இற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் இவ்விரு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 38 வாக்குச் சாவடிகளிலும் கடுமையான கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்கவிருப்பதாக பெப்ரல் சி. எம். . வி. மற்றும் கபே அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறினர்.

பாராளுமன்றத் தேர்தல்கள் தினத்தன்று மேற்படி தேர்தல் தொகுதிகளில் மோசடி இடம்பெற்றமை காரணமாக வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டு எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பை நடாத்த தேர்தல்கள் ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீள்வாக்களிப்பு நடத்தப்படவிருக்கும் 38 வாக்காளர் பிரிவுகளுக்குமென 50 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.

இரண்டு குழுக்களாக இவர்கள் செயற்படுவர். எட்டுப் பேர் கொண்ட குழு கும்புறுபிட்டியவிலும் மிகுதி 42 பேர் கொண்ட குழு நாவலப்பிட்டியிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பெப்ரல் 04 வாகனங்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சி. எம். . வி. அமைப்பு ஒரு வாக்காளர் பிரிவுக்கு ஒருவர் வீதம் 38 பேரையும் 02 வாகனங்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தவிருப்பதாக அதன் பேச்சாளர் கெ. திசாநாயக்க தெரிவித்தார். கடந்த முறை மேற்படி தேர்தல் தொகுதிகளில் வாக்குச் சாவடிக்கு வெளியிலேயே கூடுதலான மோசடிகள் குறித்து முறையிடப்பட்டமையினால் வாக்குச் சாவடிகளுக்கு வெளியிலேயே கூடிய கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் அவர் கூறினார்.

கபே அமைப்பு நேற்று முதல் கண்காணிப்பாளர்களை வாக்காளர் பிரிவுகளுக்கு அனுப்பி நிலைமையை அவதானித்து வருவதுடன் தேர்தல்கள் தினத்தன்று சுமார் அறுபதுக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருப்பதாகவும் அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தல் பிரசாரப் பணி கள் இன்று (17) நள்ளிரவுடன் நிறைவடைவ தனால் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப் பிட்டி தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு தினமான எதிர்வரும் 20ம் திகதி வாக்குச் சாவடிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் மோசடிகள் அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில் பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மீள்வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்கவென கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அப்பிரதேசங்களுக்கு அனு ப்பிவைக்கப்படவுள்ளன. வாக்குச் சாவடி களில் பணியாற்றுவதற்காக 380 உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் வாக்கு எண்ணுவதற்கு 650 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
SATURDAY, APRIL 17, 2010லக்ஷ்மி பரசுராமன்