Thursday, February 25, 2010

17 கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல்



பாராளுமன்றத் தேர்தல்களுக்காக நேற்று 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேநேரம், 56 சுயேச்சைகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இதன்படி, இலங்கைத் தமிழ் அரசு கட்சி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல மாவட்டங்களில் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.

சமூகத்துவ சமத்துவ கட்சி காலி, கொழும்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜயோ கட்சி காலி, குருணாகல் மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் இலங்கை தேசிய முன்னணி பொலன்னறுவை, புத்தளம், கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஜாதிக்க ஜனசத்த கட்சி பொலன்னறுவையிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி குருணாகலையிலும் தேசப் பிரேமி தேசிய முன்னணி புத்தளம், இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் சிங்களயி மஹா சம்மத பூமி புத்ர கட்சி புத்தளம் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணி இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் கட்சி இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் ஜனசத்த முன்னணி கண்டியிலும் ஐக்கிய இலங்கை மகா சபை மாத்தளை, களுத்துறை மாவட்டங்களிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி களுத்துறையிலும் ஐக்கிய சமத்துவ கட்சி களுத்துறையிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியிலும் மலையக மக்கள் முன்னணி பதுளையிலும் நேற்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை நேற்று யாழ்ப்பாணம், கம்பஹா, காலி, அநுராதபுரம், கேகாலை, கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய ஒன்பது மாவட்டங்களிலிருந்தும் ஒவ்வொரு சுயேச்சைக் குழு வீதம் ஒன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின. திருகோணமலை, புத்தளம், மாத்தளை, வன்னி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா இரண்டு சுயேச்சைக் குழுக்கள் வீதம் 08 சுயேச்சைக் குழுக்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 03 சுயேச்சைக் குழுக்களும் பொலன்னறுவையிலிருந்து 04 சுயேச்சைகளும், இரத்தினபுரியிலிருந்து 04 சுயேச்சைக்களுமாக மொத்தம் 28 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதுவரை 226 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று மாத்திரம் 56 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் நாளை (26) நண்பகல் 12.00 மணிக்கு பூர்த்தியடைய உள்ளன. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று (25) பல மாவட்டங்களுக்கு சுப நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஐ. தே. க.வும் ஜனநாயக தேசியமுன்னணி (ஜே.வி .பி. தலைமையிலான) ஆகிய கட்சிகள் இன்றும் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளன.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. ஐ.ம.சு. முன்னணி ஏற்கனவே கம்பஹா, ஹம்பாந்தோ ட்டை காலி ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதோடு நேற்று மாத் தளை மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளர் பட் டியல் முதன்மை வேட்பாளர் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்டி யலில் மாத்தளை மாநகர மேயர் ஹில்மி கரீம், செந்தில் சிவஞானம் (இ.தொ.கா.), முன்னாள் அமைச்சர்களான ரோஹன திஸாநாயக்க, நந்தி மித்ர ஏக்கநாயக்க ஆகியோரும் அடங் குவர். சுயேச்சைக் குழுவொன்றும் நேற்று (24) மாத்தளை மாவட்டத்துக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தது.


இதேவேளை ஐ.ம.சு. முன்னணி இன்று மட்டக்களப்பு, வன்னி, அம்பாறை, மாத்தறை உட்பட பல மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்களை கையளிக்க உள்ளதோடு நாளை (26) பதுளை, கொழும்பு உட்பட எஞ்சிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி தெரிவித் தது.

இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் போட்டியி டுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தது. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட புளொட் கட்சியும் நேற்று வேட்பு மனுக்களை கையளித்தன. வன்னியில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அந்தக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சத்தியசீலனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட த.ம.வி. புலிகள் கட்சியின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா கூறினார். தமது கட்சி ஏற்கனவே வன்னி, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு த.ம.வி. புலிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் மட்டு மாவட்டத்துக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். இதே வேளை முன்னாள் எம்.பி. இராஜகுகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக்குழு நேற்று (24) வன்னி மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதே வேளை, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (24) ஜனசெத்த முன்னணியும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தன.
THURSDAY, FEBRUARY 25, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, February 24, 2010

வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பணிகள் துரிதம்


பொதுத் தேர்தல் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டே தினங்கள் எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்யும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவடைவதுடன் நாளை (25) வியாழன் நண்பகல் வரை சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும். இந்நிலையில் நேற்று ஏழு அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள் ளன.

காலி, வன்னி, அனுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்காக ஜனசெத முன்னணியும் திருமலை மாவட்டத்துக்காக சிங்கள மஹா சம்மத பூமி புத்ர கட்சியும் யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களுக்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், கேகாலையில் இலங்கைத் தொழிலாளர் கட்சியும் கண்டி, மொனராகலை மாவட்டங்களில் தேசிய அபிவிருத்தி முன்னணியும் களுத்துறையில் தேசப்பிரேமி ஜாதிக முன்னணியும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு சுயேச்சைக் குழு வீதமும் இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து இரண்டு சுயேச்சைக் குழுக்கள் வீதமும் மாத்தளையில் மூன்று சுயேச்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. 58 சுயேச்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருப்ப தாகவும் செயலகத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று வரை 170 சுயேச்சைக் குழுக் கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்டத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரம் நேற்று (23) தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் அமைச்சர் பியசேன கமகே தலை மையில் தாக்கல் செய்யப்பட்டது. வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்பு மனுவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐ. ம. சு. மு. தாக்கல் செய்யவுள்ளது.
வேட்பாளர் பட்டியலில் முத ன்மை வேட்பாளராக அமைச்சர் றிசாத் பதியுதீன் போட்டியிடுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன் னாள் உறுப்பினர்கள் இருவர் உள்ளி ட்ட ஒன்பது பேர் இடம்பெற்று ள்ளதோடு வவுனியா வர்த்தக சங்க முக்கியஸ்தர் ஒருவரும் இந்த வேட் பாளர் பட்டியலில் இடம் பெற்று ள்ளார்.

இதற்கிடையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பினர் இன்று புதன்கிழமை வன்னி மாவட்ட தேர்தலுக்குரிய வேட்பு மனுவை வவுனியா மாவ ட்ட செயலகத்தில் தாக்கல் செய் கின்றனர். முன்னாள் வன்னி எம்.பி யும் ரெலோ தலைவருமான செல் வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராய் போட்டியிடுகிறார்.

ஏனைய ஒன்பது பேரில் முன்னாள் உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜனசெத்த பெரமுன நேற்று வன்னி மாவட்டத்திற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. முதன்மை வேட்பாளர் சிறிபால ஹெட்டியாராச்சி மனுவை கையளித் துள்ளார். ஒன்பது வேட்பாளர்களில் இருவர் தமிழர்களாவர்.

நேற்று நண்பகல் வரை வவுனியா தேர்தல் அலுவலகத்தில் வன்னி மாவட்ட தேர்தலுக்கு மூன்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன.

மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
ஜனசெத பெரமுன நேற்று மாலை களுத்துறை மாவட்டச் செய லாளர் எஸ். ஹபுஆரச்சியிடம் நிய மனப் பத்திரத்தை கையளித்துள்ளது.

தேசிய அபிவிருத்தி முன்னணி கண்டி மாவட்டத்திற்கான வேட்பு மனுவை கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியான எஸ். எம். கோட்டாப ஜயரத்ன முன்னி லையில் நேற்று (23) தாக்கல் செய்து ள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நேற்றுவரை 31 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக, அம்பாறை மாவட்ட உதவித் தேர் தல் ஆணையாளர் எம். எம். எஸ். கே. பண்டாரமாப்பா தெரிவித்தார்.

எனினும், இம் மாவட்டத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்புமனுக்களைத் தாக் கல் செய்யவில்லை. ஆனால், 2 சுயேச்சைக் குழுக்கள் நேற்று நண்ப கலளவில் தங்கள் வேட்பு மனு க்களை தாக்கல் செய்தன.

மலையக மக்கள் முன்னணி இன்று (24) புதன்கிழமை பதுளை மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றது.

பதுளை மாவட்ட மலையக மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளராக ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக் கள் முன்னணியின் உப தலைவர் களில் ஒருவருமான அ. அரவிந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி பதுளை, நுவரெலியா மாவட்டங் களில் தனியாக மண்வெட்டி சின்னத்தில் களமிறங்குகிறது.
WEDNESDAY, FEBRUARY 24, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, February 22, 2010


வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரிலிருந்து அதி சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த இரு தினங்களாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பயனாகவே இவை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேடுதலின் போது நான்கரை கிலோ கிராம் நிறைகொண்ட குண்டு, 06 – கிரனேற் கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ கிராம் மற்றும் ஒரு கிலோவும் 200 கிராம் நிறையும் கொண்ட இருவேறு தற்கொலை அங்கிகள், 04, டெட்டனேட்டர்கள், 02 டோச்கள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
MONDAY, MARCH 08, 2010லக்ஷ்மி பரசுராமன்

ஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக்க ஏற்பாடு:முதல் பட்டியல் கம்பஹாவில் இன்று தாக்கல் மு.கா.இன்று முடிவு




பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று (22) முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களி னால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஐ. ம.சு. முன்னணி ஏற்கெனவே 17 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை பூர்த்தி செய்துள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் அமீர் அலி தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதோடு ஐ.ம.சு. முன்னணி மட்டு. மாவட்ட வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டனர்.

இப்பெயர்ப் பட்டியலில் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி த. தங்கேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலி ஸாஹிர் மெளலானா, ரமேஷ் கலைச்செல்வன், பலனித்தம்பி குனசேகரம், கே. சத்தியவரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.

இதேவேளை வன்னி மாவட்டத்திற்கு தனது தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், முன்னாள் எம்.பி. திடீர் தெளபீக் ஆகியோரும், மட்டு. மாவட்டத்தில் அமைச்சர் அமீர்அலி மற்றும் மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.

இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோரும் வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட உள்ளதாக அறிய வருகிறது.

அ.இ.மு.கா 6 மாவட்டங்களில் போட்டியிட உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பி.தயாரத்ன முன்னாள் எம்.பி. ஏ. எம். எம். நெளசாத் முன்னாள் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் சரத் வீரசேகர ஆகியோர் போட்டியிடவுள்ளதோடு அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து ஆராயப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

திருகோணமலை மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்களும் துரிதமாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில், ஐ.தே.க, ஜே. வி.பி. தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கலான கட்சிகள் இன்னமும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறியில் உள்ளன. எதிர்க்கட்சிகளே இந்தக் குழப்பகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நேற்று வெளியிட்டிருந்தன.

ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டி

வடக்கிலும் தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நேற்று தீர்மானம் எடுத்திருப்பதாக கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மெளலான தினகரனுக்குத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதென கட்சி தீர்மானம் எடுத்திருந்தது. அம்பாறை உட்பட கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனு நாளை சமர்ப்பிக்கப்படவி ருப்பதாகவும் கட்சிப் பேச்சாளர் ஆஸாத் மெளலானா கூறினார்.

மு.கா. இன்று முடிவு

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்திருப்பதாக கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இன்றைக்குள் இறுதித் தீர்மானத்தை வெளியிடுவாரென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடுபூராவும் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுமாக விருந்தால் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தின் ஒரு மாவட்டத்திலும் போட்டியிடுவாரெனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவிருந்தால் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவ தற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டியிருப்பின் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முஸ்லிம் உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஐ.தே. க. வின் தற்போதுள்ள அமைப்பாளர்களை மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமெனவும் கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் குறிப்பிட்டார்.
MONDAY, FEBRUARY 22, 2010லக்ஷ்மி பரசுராமன்

அ.இ.மு.கா. 6 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டி:மட்டு. முதன்மை வேட்பாளர் அமீர் அலி



அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

அ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

ஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, FEBRUARY 22, 2010லக்ஷ்மி பரசுராமன்

ஜோர்தான் நாட்டுக்கு பணியாட்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்:



ஜோர்தான் நாட்டுக்குப் பணி யாட்கள் அனுப்புவதைத் தற்காலிக மாக இடை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி யகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரண வக்க நேற்று தெரிவித்தார்.

இலங்கைப் பணியாட்கள் ஜோர் தானில் எதிர்நோக்கும் பிரச்சினைக ளுக்கு உடனடித் தீர்வு காணும் முகமாகவே இத் திட்டத்தினை தற் காலிகமாக இடை நிறுத்தி வைத்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

பணியாட்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தமது கடமை களை நிறைவு செய்வதற்காக இல ங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மூன்று வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருப் பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜோர்தான் நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தொடர்பாக நாளுக்கு நாள் முறைப் பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த மையையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MONDAY, FEBRUARY 22, 2010லஷ்மி பரசுராமன்

Tuesday, February 16, 2010

கொழும்புத்துறை குண்டு வெடிப்பு: 2 மாணவர் மரணம்; 6 பேர் காயம்



யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடி ப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக் கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகாமையில் பந்துபோன்ற வொன்று காணப்பட்டதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் சிலர் அதனை எடுத்து பரிசீலித்துள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த பெரியவர் ஒருவர் அதனை வீசிவிடுமாறு கூறியதையடுத்து மாணவர்கள் தூரத்தில் எறிந்தபோதே அது வெடித்துச் சிதறியுள்ளது. அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்ககள் சம்பவ இடத்தி லேயே கொல்லப்பட்டதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.
TUESDAY, FEBRUARY 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, February 15, 2010

கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவும் போட்டி 25இல் பதவியிலிருந்து இராஜினாமா



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அபேட்சகராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா போட்டியிடு கின்றார். அதற்கமைய தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் நேற்று தினகரனுக்கு கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சுப் பதவிக்கான இராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா கையளிக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சித் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்ட கூட்டத்தில், கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்காக போட்டியிடுபவர்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படு மெனவும் தெரிவித்தார்.
MONDAY, FEBRUARY 15, 2010லக்ஷ்மி பரசுராமன்

நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்





பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மெனிக் பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

அதேவேளை 700 பேர் பச்சிளைப்பள்ளி, பளை நகரம், தில்லிவளை கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளியடி ஆகிய பகுதிகளிலும் மேலும் 230 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் குமரபுரம் மற்றும் உமங்களபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ் வாரத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட விருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டி னார்.

வவுனியாவில் நிவாரணக்கிராமங்களி லிருந்து வெளியேறி உறவினர்களுடன் தங்கியிருக்கும் 2,216 பேர் கடந்த சனிக்கிழமை பெரிய பரந்தன், திருநகர் வடக்கு மற்றும் மேற்கு, கரச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்திருத்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கை கள் துரிதப்படு த்தப்பட்டமைக்கு அமைய சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அவர்க ளது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தாமத மடைந்ததைத் தொடர்ந்து மீள்குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 02 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
MONDAY, FEBRUARY 15, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது



சரத் பொன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வ தேச நாடுகள் தலையிட முடி யாதென வெளிவிவகார அமை ச்சர் ரோஹித்த போகொல் லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமை யவே இக்கைது இடம்பெற்றி ருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடு க்க முடியாதெனவும் அமை ச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரு ம்பியுள்ள அமைச்சர் அமைச் சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்ப தற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர்.

தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.
WEDNESDAY, February 10, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, February 8, 2010

வாகன விபத்துக்களில் அறுவர் மரணம்



நாட்டின் பல பிரதேசங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஐயக்கொடி கூறினார்.

மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்திருப்பதாகவும் நேற்று முன்தினம் நவகமுவ, நிட்டம்புவ மற்றும் கட்டுகஸ்தோட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் 114வது மைல் கல்லுக்கு அருகாமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற வான் ஒன்று வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
TUESDAY, February 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

வவுனியா வடக்கு மீள்குடியேற்றம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்:மீள்குடியேறுவோருக்கு 8900 வீடுகள் நிர்மாணம்


வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் கட்டிக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்ப ர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டு ள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று (08) கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
MONdAY, February 08, 2010லக்ஷ்மி பரசுராமன்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர்நாடு திரும்பியவர்கள் தொடர்பான ஆய்வு பணியகத்தால் ஆரம்பம்:



வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொட்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பான தகவல்கள் விமான நிலையத்தினூடாக பெற்றுக் கொள்ளப்ப டுவதுடன் தகவல்களை பெறுவதற்காக பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும் குறித்த இலக்கின்றி தமது பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். இதனால் அவர்கள் உழைக்கும் பணத்தை சிறப்பான முறை யில் எப்படி முகாமைத்துவம் செய்யலாம், எந்தத்துறைகளில் அதனை முதலீடு செய்வதன் மூலம் அதனை பல மடங்கு பெருக்கலாம் போன்ற ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கப்பட வுள்ளன.

நாட்டுக்கு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பின், அவர்கள் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்பது குறித்த அறிவுரைகளும் இதன் மூலம் எடுத்துரை க்கப்படவுள்ளன.

எனவே வெளிநாடு சென்று திரும்பிய வர்களுக்கு இந்த ஆய்வு பேருதவியாக விருக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
MONDAY, February 08, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, February 1, 2010

62வது சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி:தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை



இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை கண்டியில் வெகுவிமர்சையாக கொண் டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர தின வைபவம் திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுகள், தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கான இரண்டு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார். நிகழ்வில் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையிலுள்ள வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

மூன்று தசாப்த காலமாக நிலவி வந்த புலி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டின் சிறந்த தலைமைத்துவம் பதவியிலிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த சுதந்திர தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்று பின்னர் கலந்து கொள்ளவிருக்கும் முக்கியமான தேசிய நிகழ்வு இதுவாகும். அதனால் இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ தலதா புனித ஸ்தலத்திலிருந்து மக்களுக்கு உரையாற்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
MondAY, February 01, 2010லக்ஷ்மி பரசுராமன்


மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீண்டும் நாளை இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கமைய ஆயிரம் பேர் பூநகரிக்கு நாளை அனுப்பி வைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட அனைவரையும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ரிசாட்டுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்ட போதும் பெரும் பாலான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஓரளவு தாமதம் அடைந்ததாகவும் நாளை முதல் மீண்டும் இப் பணிகளை கட்டம் கட்டமாக துரித கதியில் முன்னெடுக்க விருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் பணிப்பினையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதற்கமையவே கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் ஆயிரம் பேர் நாளை செவ்வாய்க்கிழமை பூநகரிக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் ரிசாட் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றவர்களும் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்தினூடாக தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப விரும்பின் அதற்கான ஏற்பாடுகளும் வவுனியா அரசாங்க அதிபரினூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளினூடாக 17 ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மேலும் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரையிலானோர் கிளிநொச்சியில் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போரின் வாழ்க்கைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உலக வங்கி பாரிய நிதியுதவியின் கீழ் பல செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
MondAY, February 01, 2010லக்ஷ்மி பரசுராமன்