Monday, November 30, 2009

திருமலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு:கடற்படையினருக்கு தொடர்பில்லை - பேச்சாளர்




திருமலை கொட்பே மீனவர் துறைமுகத் திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞனுக்கும் கடற்படையி னருக்கும் எதுவித தொடர்பும் இல்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையிலிருந்த மேற்படி சிங்கள இளைஞனை அன்றைய தினம் துறைமுகத்தில் கடமையிலிருந்த கடற்படை வீரரே கடத்திக் கொலைசெய்ததாக மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்படும் கூற்றை மறுக்கும் கடற்படைப் பேச்சாளர் கொலைக்கும் கடற்படையினருக்கும் எவ்வித தொடர்புமில்லையென தினகரனுக்குக் கூறினார்.
MONDAY, NOVEMBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, November 25, 2009

யாழ். எஸ். எஸ். பி சார்ள்ஸ் கொலை: பிரதான சந்தேக நபர் கைது


யாழ். மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்தன கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சுண்ணாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரகாஷ் (31) எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வந்த பொலிஸ் அத்தியட்சகர் சார்ள்ஸ் விஜேவர்தன கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி புலிகளினால் கடத்திச் செல்லப்பட்ட பின் வெட்டிக் கொலை செய்யப்படடார்

WEDNESDAY, NOVEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தமிழ்க் கூட்டமைப்புதிருமலை மாவட்ட உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

திருகோணமலை மாவட்ட நகர சபைத் தலைவர் எஸ். ஜி. முகுந்தன், உப்புவெளி நகர மற்றும் கிராம சபைத் தலைவர் டி. கந்தரூபன், குச்சவெளி பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் யு. ரவிகுமார், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட அரசியல் விவகாரங்களுக்கான ஊடக செயலாளர் மற்றும் குழு இணைப் பாளர் எஸ். அசோக் சிவகுமரன் ஆகியோரே நேற்று பசில் ராஜபக்ஷ எம்.பியை சந்தித்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்துக்கும் தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்குமென கூட்டமைப்பின் திருமலை மாவட்ட உறுப்பினர்கள் பசில் எம்.பியிடம் இச்சந்திப்பின் போது உறுதி அளித்துள்ளனர்.
WEDNESDAY, NOVEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, November 24, 2009

பிரதமர் மற்றும் போகொல்லாகம மேற்கிந்தியதீவு பயணம்


பொதுநலவாய அமைப்பின் 21வது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று (24) ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

பொதுநலவாய அமைப்பின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகா ரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதிவரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வரென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
TUESDAY, NOVEMBER 24, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 23, 2009

வவுனியா வடக்கு மீள்குடியமர்த்தும் தினம் பற்றி இன்று முடிவெடுக்கப்படும்



வவுனியா வடக்கில் மீள்குடியேற் றத்துக்கு தயார் நிலையிலிருக்கும் ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் அனைத்து உட்கட்டமைப்பு பணிக ளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்க ப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மோதல் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப் போரில் முதற் கட்டமாக 300 குடும் பங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் தினம் தொடர்பாக தமது தலை மையில் இன்று கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா வடக்கிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் 06 கிராம சேவகர் பிரிவுகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் மீள்குடி யேற்றத்துக்கு தயார் நிலையிலுள் ளன. இப்பிரதேச செயலாளர் பிரிவு களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் துரித கதியில் மேம்படுத் தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்துப் பணிக ளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தி யாக்கப்படுவதுடன் அனைத்து அலு வலகங்கள் மற்றும் உப அலுவலக ங்களும் இவ்வாரம் முதல் செயற் படுமெனவும் அரசாங்க அதிபர் கூறி னார்.

இதேவேளை மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் உள் வீதிகளை புனரமைப்பு செய்வதற் கென உலக வங்கி 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருப்பதாகவும் புனரமைப்பு வேலைகள் மும்முர மாக நடைபெற்று வருதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் நேற் றைய திகதிக்கு ஒரு இலட்சத்து 27 ஆயிரம் பேர் வரையிலானோரையே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள் ளது.

இவர்கள் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார் மற்றும் வவு னியா வடக்கைச் சேர்ந்தவர்கள். அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தப் படவுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தோரை விரை வில் மீளக்குடியமர்த்துவதற்கான நட வடிக்கைகளை அரசாங்கம் முன் னெடுத்து வருகிறது.

அந்த வகையில் வவுனியா வட க்கில் மீதமாகவுள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணிவெடி யகற்றும் பணிகள் துரிதப்படுத்த ப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அதேவேளை நிவாரணக் கிராமத் திலுள்ள 800 பேர் இன்று முல்லை த்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட விருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவி த்தார்.

கடந்த வாரம் இங்கு 1100 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
MONDAY, NOVEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

சார்க் வர்த்தக தலைவர்களின் 3வது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பம்:முதல் அமர்வில் பிரதமர் பிரதம அதிதி


சார்க் வர்த்தக தலைவர்களது மூன்றாவது மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.

தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டின் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கை வர்த்தக சம்மேளனமும் சார்க் வர்த்தக சம்மேளனமும் இணைந்து, ‘தெற்காசியாவில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பு’ எனும் தொனிப் பொருளில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந் தது.

இம்மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தின் காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

ஒரு நாட்டின் அபிவிருத்தி தனியே அந்த அரசாங்கத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தனியார் துறையின் பங்களிப்பும் இதற்கு மிக அவசியம்.

எமது நாட்டினுடைய எதிர்காலம் எமது கைகளிலேயே உள்ளது. தெற்காசிய பிராந்தியத்¨தைச் சேர்ந்த நாம் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே எமது நாடுகளை வளம் மிக்கதாக ஆக்க முடியும்.

அதற்கு வர்த்தக சம்மேளனத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது உரையில் குறிப்பிட்டார்.
MONDAY, NOVEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி வானை கடத்திய மர்ம மனிதர்:வெள்ளி சம்பவம்; சனிக்கிழமை மர்ம மனிதர் வானுடன் கைது



வானில் பயணம் செய்தோரை மயக்கி வேனை அபகரித்துச் சென்ற மர்ம மனி தரை பொலிஸார் வேனுடன் கையும் மெய்யுமாக கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கரு ணாரத்ன தெரிவித்தார்.

இச்சம்பவம் கட்டுநாயக்க பகுதியில் வெள்ளி இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில் வேனை வாடகைக்கு அமர்த்தி மூன்று நண்பர்கள் அதில் சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து இடை நடுவே இந்நண்பர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு மர்ம மனிதர் நீர்க்கொழும்பு செல்வோமெனக் கூறி அதேவேனில் பயணித்துள்ளார்.

வெலிசர பகுதியில் வைத்து அனைவரும் இந்த மர்ம மனிதர் வாங்கிக்கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதையடுத்து மயக்கமுற்றுள்ளனர்.

இதனையடுத்து அம்மர்ம நபர் 16 இலட்சம் ரூபா பெறு மதியான வானை கடத்திச் சென்றுள்ளார். சனிக்கிழமை கட்டுநாயக்க எவரிவத்தை பகுதியில் வைத்து வேனை குறித்த மர்ம மனிதனுடன் கைது செய்துள்ளனர்.
MONDAY, NOVEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 16, 2009

சவூதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்: சவூதி அரேபிய அரசுடன் பேச்சு நடாத்தபைலா தலைமையிலான குழு இன்று பயணம்



சவூதி அரேபியாபில் நிராதரவான நிலையில் இருக்கும் இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு திருப்பியழைப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலை மையிலான உயர்மட்டக் குழு இன்று சவூதி பயணமாகின்றது.

ஜித்தாவிலுள்ள பாலமொன்றின் கீழ் தமது தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் இலங்கையர்கள் பலர் நிராதரவான நிலையிலிருப்பதாக அண்மையில் வெளிவந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் பொருட்டு விசேட குழுவொன்றை நியமித்ததாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஹரிஸ்சந்திர பட்டகொட, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜான் ரட்நாயக்க, பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய உள்ளிட்ட குழுவினரே இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா புறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் ஜித்தா பாலத்தின் கீழ் கடந்த காலங்களில் நிராதரவான நிலையிலிருந்த 2040 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களை சவூதி அரேபிய அரசாங்கம் 156 மில்லியன் ரூபா செலவில் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இருப்பினும் தற்போது அந்நாட்டு சட்ட விதிமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தொழிலற்ற நிலையில் பாலத்தின் கீழ் இருப்போரை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜித்தாவிலுள்ள பாலத்தின் கீழ் தற்போது சுமார் மூவாயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்பற்ற நிலையில் தங்கியுள்ளனர். இவர்களுள் 250 பேர் இலங்கையர்களாவர்.

அந்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கமைய விரைவில் இலங்கையர்களை திருப்பியழைப்பது தொடர்பான பேச்சுக்களை இக்குழு மேற்கொள்ளுமெனவும் பணியகத்தின் தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
MONDAY, NOVEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வவுனியா மீள்குடியேற்றம், புனர்நிர்மாண பணி:ஜப்பான் அரசு, உலக ஸ்தாபனங்கள் 250 மில். அ. டொலர் வழங்க இணக்கம்


வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் மற்றும் புனர் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக வெளிநாடுகள் மற்றும் உலக ஸ்தாபனங்கள் மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடத்துக்குள் வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் அரசாங்கம் ஆகியனவே எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந் நிதியுதவியை வழங்க
MONDAY, NOVEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

மீள் குடியேற்றத்துக்கு தயாராக 10 இடங்கள்


வவுனியா மாவட்டத்தில் 10 இடங்கள் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக் காக தயார் நிலையிலிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா வடக்கே நெடுங்கேணி உட்பட்ட ஏழு பிரதேச செய லாளர் பிரிவுகளும் வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கன்னிக்குளம், சேமமடு, பால மடு, பன்றிக்கெய்த குளம், இர ணைக் குளம், ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை உள்ளிட்ட பத்து இடங்களே மீள்குடியேற் றத்துக்கு தயாராகயிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மீளக் குடியர்த்தப்படுவோரு க்கு வாழ்வாதார தொழிலை
பெற்றுக் கொடுக்கும் நோக்கி லும் பெரும்போக பயிர்ச் செய்கையில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டு வருவதா கவும் வவுனியா அரச அதிபர் சுட்டிக் காட்டினார்.

நிவாரணக் கிராமங்களில் 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் இருந்த இடத்தில் தற் போது ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரே இருக்கின்றனர்.

மீள்குடியேற்றம் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தல் என நாள்தோறும் மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் வரையான மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியில் செல்கின்றனர் என்றார்.
MONDAY, NOVEMBER 16, 2009 MONDAY, NOVEMBER 16, 2009

Thursday, November 12, 2009

அரச துறையில் மேலும் 17,174 பட்டதாரிகளை இணைக்க தீர்மானம்:வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்



17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.

அத் துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைக ளையும் இவர்கள் பெறமுடியும். சாதார ணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப் பிட்டதற் கமைய கிராமங்களை கட்டி யெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப் பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய் யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
THURSDAY, NOVEMBER 12, 2009 லக்ஷ்மி பரசுராமன்

இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் சேவையில் ஈடுபட படையினர் தயார்:இராணுவப் பேச்சாளர்



தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா யின் அதனை நிவர்த்தி செய்யும் வகை யில் சேவையில் ஈடுபட படைவீரர் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத் துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையிலேயே முப்படை யினர் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக் கார கூறினார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபையின் இயந்திரங் களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர். இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
THURSDAY, NOVEMBER 12, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, November 11, 2009

மின்சாரசபை, பெற்றோலிய் ஊழியருக்கு சம்பள உயர்வு:இம்மாதம் முதல் அமுல்; கல்விக் கல்லூரி மாணவர் கொடுப்பனவும் அதிகரிப்பு



கல்விக் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை இரண்டு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி ருவன்புர தேசியக் கல்விக் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பப்பீடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கினார்.

கல்விக் கல்லூரி மாணவர்க ளுக்கு தற்போது மாதாந்தக் கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.

இதனை 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடத்திலிருந்து இக்கொடுப்பனவு அதிகரிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பெட்ரோலியக் கூட்டுத் தாபன ஊழியர்களுக்கு இம்மாதம் (நவம்பர்) முதல் அமுலுக்கு வரும் வகையில் அடிப்படைச் சம்பளத்தில் 22 சதவீத அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்றுத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பள அதிகரிப்பு நிலுவையை ஜனவரியில் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சில் நேற்று மாலை அமைச்சர் பெளசி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கையடிப்படையில் இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இம்மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது.

அந்த அடிப்படையிலேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர் களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று முன்னெடுக்க திட்டமிட்டிருக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடு மாறும் அமைச்சர் பெளசி கேட்டுக் கொண்டுள்ளார்.

வழங்கப்படவிருக்கும் சம்பள அதி கரிப்பு தொடர்பாக நேற்று கூட்டுத் தாபனத்தின் குறித்த தொழிற் சங்கங் களுடன் அமைச்சரும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் பேச்சு நடத்தியு ள்ளமை இருப்பினும் தொழிற் சங் கங்கள் அதற்கு இணக்கம் தெரிவி க்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்புக்கான நிலுவையை தமக்குப் பெற்றுத் தர வேண்டுமென்ற கோரிக்கையிலேயே அவர்கள் தொடர்ந்துமி ருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் சம்பள அதிகரிப்புக்கான நிலுவையைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமாகாது. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய செலவீனங்களை செய்திருந்தமையினால் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப் பகுதிக்குரிய சம்பள அதிகரிப்பு நிலுவையை அரசாங்கத்துக்கு தியாகமாக வழங்க முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் தொழிற்சங்கங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக நேரிடுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எவ்வித தடங்கல்களும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையிலிருப்பதாக குறிப்பிட்டார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திலேயே பெருமளவிலான ஊழியர்கள் சேவை புரிகின்றனர். சில தொழிற்சங்கங்கள் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டாலும் எமக்கு நம்பிக்கைக்குரியவர்கள் சீரான சேவையை பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

வழமைக்கும் மாறாக 1600 லீற்றர் டீசல் கொண்ட 300 பவுசர்கள் கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியசாலைக்கும் 6600 லீற்றர் டீசல் கொண்ட 300 பவுசர்கள் முத்துராஜவெல எண்ணெய்க் களஞ்சியசா லைக்கும் நேற்று நள்ளிரவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல் தாங்கிகள் முழுவதையும் நிரப்புவதற்கு கடன் வசதிகளையும் நாம் வழங்கியிருக் கிறோம். எனவே, பொதுமக்கள் இதற்காக அஞ்சவோ நீண்ட வரிசையில் காத்திருந்து காலத்தை வீணடிக்கவோ தேவையில்லை.

சில விஷமிகள் திட்டமிட்டு அரசாங்க த்துக்கு சேறு பூசவேண்டுமெ ன்பதற்காக சிறு போத்தல்களை ஏற்றிக் கொண்டு நள்ளிரவு முதல் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையிலேயே நாம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே, பொதுமக்கள் இதற்காக அஞ்சி எரிபொருளை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லையெனவும் அமைச்சர் பெளசி வலியுறுத்திக் கூறினார்.
WEDNESDAY, NOVEMBER 11, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, November 9, 2009

கியூபா நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை:மியன்மார் ஜனாதிபதி 12 இல் விஜயம்


கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்கொஸ் ரொட்ரிகஸ் கொஸ்டா இன்று (9ம் திகதி) இலங்கை வருகிறார்.

இலங்கைக்கும் கியூபாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாகவே அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.

இதேவேளை இலங்கை - கியூபா 60 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சில் இன்று முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் புதன்கிழமை தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் வியாழக்கிழமை மியன்மார் ஜனாதிபதியும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

ஏ(எச்1என்1): இலங்கையில் முதல் மரணம்::கண்டி வைத்திய தம்பதியரின் 16 வயது புதல்வன் உயிரிழப்பு


இலங்கையில் முதல் தடவையாக ஏ(எச்1என்1) இன்புளுவன்சா நோய்த்தாக்கத் திற்கு கண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பலியாகியுள்ளார். வைத்தியத் தம்பதியினரின் மகனான மேற்படி பாடசாலை மாணவன் கடந்த புதன்கிழமை இரவு கண்டி போதனா வைத்தியாலையில் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் இதுகுறித்து கவலையடையத் தேவையில்லையெனவும் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரஸ் தாக்கியிருக்கின்றது என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரசினால் பாடசாலை மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டமை ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட அம்மாவட்டத்தின் நகரப் பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படுவதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான மாணவர்கள் இருவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

சு. க. வின் 19வது தேசிய மாநாட்டில் 15 நாடுகளின் பிரதிநிதிகள்



“சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம்” எனும் தொனிப் பொருளிலேயே இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படவிருப்பதாக மேல் மாகாண ஆளுநரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான அலவி மெளலான தெரிவித்தார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி தேசிய மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடாகும். மூன்று மணியளவில் ஆரம்பமாக விருக்கும் இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படுவதோடு, தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்படுமென சு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள், சு.க. அமைப்பாளர்கள், ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுவார்கள்.

சு.க. வின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்துக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வதெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். சு.க. வின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்களெனத் தெரியவருகிறது.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

மாளிகாவத்தையில் இளைஞன் கைது


மாளிகாவத்தையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று 2 கிராமும் 50 மில்லிகிராமும் கொண்ட ஹெரோயின் பக்கற்றுக் களுடன் கைது செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.


காலி கின்தோட்டை ரயில்வே கடவைக் கருகில் வைத்தே மேற்படி இளைஞர் தென்மாகாண பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்