Tuesday, October 12, 2010

முல்லைத்தீவில் 11 விமான குண்டுகள் கண்டுபிடிப்பு


முல்லைத்தீவு காட்டுக்குள்ளிலிருந்து அதிசக்தி வாய்ந்த 11 விமான குண்டுகள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். முன்றரை அடி நீளமும் 2 1/2 அடி அகலமும் கொண்ட 50 கிலோகிராம் நிறையுடைய 04 விமான குண்டுகளும் 3 1/2 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட 25 கிலோகிராம் நிறையுடைய 07 விமான குண்டுகளுமே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போதே இவை கைப்பற்றப் பட்டுள்ளன. ஏ-35 முல்லைத்தீவு - பரந்தன் வீதியிலமைந்துள்ள காட்டுக்குள் காணப்பட்ட பதுங்கு குழிக்குள்ளிருந்தே மேற்படி விமான குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
TUESDAY, OCTOBER, 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 7, 2010

எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு


பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்ய ப்பட மாட்டார்களென பொலிஸ் தலை மையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
THURSDAY, OCTOBER, 07, லக்ஷ்மி பரசுராமன்

Monday, October 4, 2010

விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு


கோதுமை மாவுக்கு மானியங்களையும் நாம் வழங்கப்போவதில்லை. உள்நாட்டு விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமென நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, பாண் விலையதிகரிப்புக் குறித்து பொதுமக்கள் கலக்கமடையத் தேவையில்லை. அதற்கு பதிலாக அரிசி உற்பத்திப் பொருட்களின் பாவனையினை அதிகரிக்கவேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிமா நிறுவன விநியோகஸ் தர்கள் கோதுமை மா கிலோ வொன்றுக்கான விலையை 8 ரூபா 33 சதத்தினால் அதிகரித்திருப்பது குறித்து நுகர்வோர் விவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்ட வாறு பதிலளித்தார்.
MONDAY, OCTOBER, 04, 2010லக்ஷ்மி பரசுராமன்)

6540 பேருக்கு நவம்பரில் ஆசிரிய நியமனம்


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் இறுதிக்கு முன்னதாக 6540 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு கட்டங் கட்டமாக முன்னெடுத்து வருகின்றதென அமைச்சின் செயலாளர் சுனில் எச். சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டிடன் அனைத்து பகுதிகளிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நவம்பர் மாத இறுதிக்குள் இந்நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 06ம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் கல்வியியற் கல்லூரியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூவாயிரம் மாணவர்களுக்கும் ஆங்கிலப் பட்டதாரிகள் 540 பேருக்கும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
MONDAY, OCTOBER, 04, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, September 28, 2010

லலித் கொத்தலாவலயின் வங்கி பெட்டகத்திலிருந்து பெருந்தொகை நகைகள்


லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவிக்குச் சொந்த மான 60 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதிமிக்க தங்க நகைகள் மற்றும் பல மாணிக்க கற்களையும் இரகசியப் பொலிஸார் நேற்று கொழும்பிலுள்ள பிரபல அரச வங்கியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரகசியப் பொலிஸார் குறித்த வங்கியின் பெட்டகங்களை சோதனையிட்ட போதே லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவியினால் பிரகடனப்படுத் தப்படாத மேற்படி நகைகளும் மாணிக்கக் கற்களும் மீட்கப்பட்டுள்ளன.

பெட்டகங்களில் இருந்து பெருந் தொகையான தங்க ஆபரணங்களு டன் முத்து, இரத்தினம், மாணிக் கம் மற்றும் வைரக்கற்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன
TUESDAY, SEPTEMBER, 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 27, 2010

34 குடும்பங்கள் முல்லைத்தீவில் இன்று மீள் குடியமர்வு


வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் இன்று முல்லைத்தீவு மாவட் டத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள் ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி நிவாரணக் கிராமங்களிலுள்ள 283 குடும்ப த்தைச் சேர்ந்தோர் கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னர் நடைபெற்ற மீள்குடி யேற்றத்தை தவறவிட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்தோரை எதிர்வரும் 11 ஆம் திகதி தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் கூறினார்
MONDAY, SEPTEMBER, 27, 2010லக்ஷ்மி பரசுராமன்