இடம்பெயர்ந்துள்ள மக்கள் நேற்று அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.நிவாரணக் கிராமங்களில் இருந்த வர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் நேற்று 57 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்ததாகவும் அரச அதிபர் கூறினார். அதேநேரம் வன்னி மாவட்டத்தில் 33 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக அரச அதிபர் மேலும் கூறினார்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரில் 15 ஆயிரத்து 763 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கென மெனிக் பார்ம்மில் 17 வாக்குச் சாவடிகளும் தமிழ் மகா வித்தியாலயத்தில் 16 வாக்குச் சாவடிகளுமாக 33 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காலை 7 மணி முதல் ஆரம்பமான வாக்களிப்பில் மக்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் சென்று வாக்களித்துள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கென விசேடமாக 100 பஸ்கள் தொடர்ச்சியாக சேவையிலீடுபடுத்தப்பட்ட தனால் மக்கள் எவ்வித சிக்கலுமின்றி வாக்களிக்கக் கூடியமாகவிருந்ததென அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த மேற்படி மக்கள் சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் சுதந்திரமாக இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய வாக்க ளிப்பின்போது எவ்வித வன்முறைகளோ முறைகேடுகளோ இடம்பெறவில்¨யெனவும் அரச அதிபர் கூறினார்.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களில் மீள்குடியமர்த்தும் பணிகள் முற்றுப்பெற்றுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையங்களில் சுமுகமான வாக்களிப்பு இடம்பெற்றது.
நெடுங்கேணி, வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், விநாயகபுரம், துணுக்காய், முத்தையன்கட்டு, கற்சிலைமடு, சின்னத்தம்பி, மாங்குளம், திருமுருகண்டி, வற்றாப்பளை, உயிலங்குளம், மல்லாவி, யோகபுரம், அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் ஆகிய இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவு வாக்களிப்பு நிலையங்களும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நான்கு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
மடு உதவி அரச அதிபர் பிரிவின் இரணை இலுப்பைக்குளம், விளாத்திக்குளம் கிராம அலுவலர் பிரிவு அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட் டிருந்தது.
FRIDAY, APRIL 09, 2010லக்ஷ்மி பரசுராமன்,

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment