Monday, February 15, 2010

கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவும் போட்டி 25இல் பதவியிலிருந்து இராஜினாமா



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அபேட்சகராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா போட்டியிடு கின்றார். அதற்கமைய தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் நேற்று தினகரனுக்கு கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சுப் பதவிக்கான இராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா கையளிக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சித் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்ட கூட்டத்தில், கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்காக போட்டியிடுபவர்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படு மெனவும் தெரிவித்தார்.
MONDAY, FEBRUARY 15, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment