
கல்விக் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை இரண்டு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி ருவன்புர தேசியக் கல்விக் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பப்பீடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கினார்.
கல்விக் கல்லூரி மாணவர்க ளுக்கு தற்போது மாதாந்தக் கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.
இதனை 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
இது பற்றி கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடத்திலிருந்து இக்கொடுப்பனவு அதிகரிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை பெட்ரோலியக் கூட்டுத் தாபன ஊழியர்களுக்கு இம்மாதம் (நவம்பர்) முதல் அமுலுக்கு வரும் வகையில் அடிப்படைச் சம்பளத்தில் 22 சதவீத அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்றுத் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பள அதிகரிப்பு நிலுவையை ஜனவரியில் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சில் நேற்று மாலை அமைச்சர் பெளசி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கையடிப்படையில் இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இம்மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையிலேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர் களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று முன்னெடுக்க திட்டமிட்டிருக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடு மாறும் அமைச்சர் பெளசி கேட்டுக் கொண்டுள்ளார்.
வழங்கப்படவிருக்கும் சம்பள அதி கரிப்பு தொடர்பாக நேற்று கூட்டுத் தாபனத்தின் குறித்த தொழிற் சங்கங் களுடன் அமைச்சரும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் பேச்சு நடத்தியு ள்ளமை இருப்பினும் தொழிற் சங் கங்கள் அதற்கு இணக்கம் தெரிவி க்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்புக்கான நிலுவையை தமக்குப் பெற்றுத் தர வேண்டுமென்ற கோரிக்கையிலேயே அவர்கள் தொடர்ந்துமி ருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜனவரி முதல் சம்பள அதிகரிப்புக்கான நிலுவையைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமாகாது. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய செலவீனங்களை செய்திருந்தமையினால் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப் பகுதிக்குரிய சம்பள அதிகரிப்பு நிலுவையை அரசாங்கத்துக்கு தியாகமாக வழங்க முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் தொழிற்சங்கங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக நேரிடுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எவ்வித தடங்கல்களும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையிலிருப்பதாக குறிப்பிட்டார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திலேயே பெருமளவிலான ஊழியர்கள் சேவை புரிகின்றனர். சில தொழிற்சங்கங்கள் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டாலும் எமக்கு நம்பிக்கைக்குரியவர்கள் சீரான சேவையை பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
வழமைக்கும் மாறாக 1600 லீற்றர் டீசல் கொண்ட 300 பவுசர்கள் கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியசாலைக்கும் 6600 லீற்றர் டீசல் கொண்ட 300 பவுசர்கள் முத்துராஜவெல எண்ணெய்க் களஞ்சியசா லைக்கும் நேற்று நள்ளிரவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல் தாங்கிகள் முழுவதையும் நிரப்புவதற்கு கடன் வசதிகளையும் நாம் வழங்கியிருக் கிறோம். எனவே, பொதுமக்கள் இதற்காக அஞ்சவோ நீண்ட வரிசையில் காத்திருந்து காலத்தை வீணடிக்கவோ தேவையில்லை.
சில விஷமிகள் திட்டமிட்டு அரசாங்க த்துக்கு சேறு பூசவேண்டுமெ ன்பதற்காக சிறு போத்தல்களை ஏற்றிக் கொண்டு நள்ளிரவு முதல் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையிலேயே நாம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே, பொதுமக்கள் இதற்காக அஞ்சி எரிபொருளை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லையெனவும் அமைச்சர் பெளசி வலியுறுத்திக் கூறினார்.
WEDNESDAY, NOVEMBER 11, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment