
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் நிர்மாணப் பணிகள் மூலம் சுமார் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் பொரு ளாதாரம் இரண்டு மடங்காக உயர்த்தப்படவிருப்பதாக துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. வி. பி. ரஞ்சித் த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினூடாக 26,500 பேர் நேரடியாகவும் 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் துறைமுக மற்றும் விமான நிலையங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தற்கால திட்டங்கள் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதில் கருத்துத் தெரிவித்த இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரம கூறுகையில், அம்பாந்தோட்டை துறைமுக கட்டமானப் பணிகள் 04 கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டம் குறித்த திகதியிலும் 12 மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் நவம்பர் முதல் துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்படவிருப்பது அறிய வந்தது முதல் இதுவரை 24 முதலீட்டாளர்கள் அங்கே முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
நாட்டில் பயங்கரவாதம் இருந்ததனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வர மாட்டார்களென பலரிடம் நிலவி வந்த கருத்தினையும் முடக்கும் வகையில் இன்று முதலீ ட்டாளர்கள் எமது நாட்டை த்தேடி வருவது பெருமைக்குரிய விடயமா கும்.
அம்பாந்தோட்டை பிரதேசமானது சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய இடத்திலுள்ளது. தினந்தோறும் 200 தொடக்கம் 300 வரையான கப்பல்கள் எமது நாட்டிற்கு வராமல் அம்பாந்தோட்டையூடாக செல்கின்றன. வருடத்துக்கு 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான கப்பல்கள் இவ்வாறு செல்கின்றன.
இதில் ஆகக் குறைந்தது 15 தொடக்கம் 20 சதவீதத்தினை இத்துறைமுகத்தினூடாக வரவழைப்பதன் மூலம் எமது நாட்டில் போதிய அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.
மேலும் இத்துறைமுகத்தினூடாக நேரடியாக 25 ஆயிரம் பேரும் மறைமுகமாக 2 இலட்சம் பேரும் தொழில்வாய்ப்பினை பெறுவர்.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் செயற்திட்டம் இம்மாத இறுதிக்குள் முழுமைப்படுத்தப்படும் வகையில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கே ஒரே தரத்தில் 10 கப்பல்களை நங்கூரமிடமுடியும். விரிவுபடுத்தும் திட்டம் முழுமைபெற்றதும் ஒரேநேரத்தில் 90 கப்பல்கள் நங்கூரமிடமுடியும்.
இதேவேளை, உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் காலி துறைமுகமும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் ஒலுவில் துறைமுகமும் சுதந்திர வர்த்தக வலயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமலை துறைமுகமும் உள்நாட்டு உற்பத்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் விதமாக காங்கேசந்துறை துறைமுகப் புனர்நிர்மாணப்பணிகளும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் கூறினார்.
இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் கமல் ரத்வத்த பேசுகையில், 2012 ஆம் ஆண்டு நவம்பர் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் மத்தள விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரே இடத்தில் 10 விமானங் கள் நிறுத்தி வைக்க கூடிய வகையில் மிகவும் விசாலமாக அமைக்கப்படும் இவ்விமான நிலையத்தில் எ 318 ரக எயார்பஸ் தலையிறங்க கூடிய வகையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1500 பேர் நேரடியாகவும் 5 ஆயி ரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
SATURDAY, MARCH 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment