மோதல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நாட்டில் அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலங்கை வந்திருக்கும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ்சிடம் கோரியுள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ரிக்கட்ஸ் நேற்றுக் காலை அமைச்சர் போகொல்லாகமவை அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடினார்.
இதன்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன உதவ முன்வர வேண்டுமெனவும், அவை மக்களின் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சரியான முறையில் செலவிடப்படுகின்றனவா என்பது குறித்து மேற்பார்வை செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
THURSDAY, MARCH 11, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment