Wednesday, March 17, 2010

15,000 கறவை பசுக்கள் ஆஸியிலிருந்து இறக்குமதி


அவுஸ்திரேலியாவிலிருந்து 15 ஆயிரம் கறவை பசுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கால்நடை அபிவிருத்தியமைச்சின் செயலாளர் சுனிமல் சேனாரத்ன நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக 4 ஆயிரம் கறவைப் பசுக்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இலங்கைக்குக் கொண்டு வரப்படுமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சில் நேற்று முன்தினம் மாலை கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நமது நாட்டைச் சேர்ந்த ஒரு கறவைப் பசுவானது நாளொன்றுக்கு 3 தொடக்கம் 5 லீற்றர் வரை பால் தரும் அதே சமயம் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பசுவானது நாளொன்றுக்கு 40 தொடக்கம் 50 லீற்றர் வரை பால் தரக்கூடியது.

இத்தகைய பசுக்களை நம் நாட்டுக்கு எடுத்து வருவதன் மூலம் தேவையான பால் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வெளிநாட்டிலிருந்து பால்மா இறக்குமதியை நாடளவில் குறைப்பதே எமது இலக்காகும். அதற்கு ஏற்ற வகையில் 2015 ஆம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் கறவைப் பசுக்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2005 ஆம் ஆண்டு முதல் 86 சதவீத பால் உற்பத்தி உள்நாட்டில் நடைபெறுவதுடன் 14 சதவீதமே இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

THURSDAY, MARCH 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment