Monday, September 20, 2010

புனர்வாழ்வு பெற்ற மேலும் 440 பேர் 30ம் திகதி உறவினரிடம் ஒப்படைப்பு


புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள மேலும் 440 பேர் எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் வைபவரீதியாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர தலைமை தாங்குவாரெனவும் ஆணையாளர் கூறினார்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையில் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது, அமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளு க்கமைய 119 பேர் இதன்கீழ் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் நூறு பெண்கள், அங்கவீனமானோர், சுகயீனமுற்றோர் மற்றும் முழுமையாக புனர்வாழ்வு பெற்று வேலை செய்ய தகுதி பெற்றோர் ஆகியோரே இம்முறை விடுவிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் புனர்வாழ்வு நிலையங்களி லிருந்து 500க்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, SEPTEMBER, 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment