Monday, September 20, 2010

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு: இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க நடவடிக்கை


வவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவு செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்திய அரசாங்கத் தினால் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர் மாணிக்கப்படவிருக்கும் 7 ஆயிரம் வீடுகளுக்குரிய பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நடைபெற்று வருகின்றன.

யுத்தத்தினால் தமது வீடுகளை இழந்தோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளி மாவட்டங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக விண்ணப்பப்படிவத் தினைப் பெற்று பூரணப்படுத்தி வேறு மாவட்டத்தில் தாம் வசிப்பதற்கான காரணத்தைத் தெளிவாக குறிப்பிட்டு அனுப்பிவைப்பதன் மூலம் அவர்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான வளமும் நிதியுதவியும் கிடைக்க வழி செய்யப் படுமென்பதால் தாமதியாது விண்ணப்பங் களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

இவை தொடர்பான அனைத்து மதிப் பீடுகளும் ஒக்டோபர் நடுப்பகுதியளவில் ஐரேப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்திருக்கும்1125 வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்ய இந்திய அரசாங்கம் முன்வந்திருப்பதனால் அதற்குரிய பயனாளிகளை தெரிவு செய் யும் விண்ணப்பப்படிவங்களும் விநியோகிக் கப்பட்டு வருகின்றன.

எமது தொழில்நுட்ப அலுவலககள் குறித்த வீட்டின் சேதம் தொடர்பாக சமர்ப்பிக்கும் கணக்கெடுப்புகளும் அடுத்த மாதமளவில் இந்திய அரசாங்கத்திடம் வழங்கப்படு மெனவும் அரச அதிபர் மேலும் கூறினார்.
MONDAY, SEPTEMBER, 20, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment