Friday, July 9, 2010

14 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை நடத்த தீர்மானம்



அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எதிர்வரும் 13 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை தெரிவு செய்யப் பட்ட 14 கரையோர மாவட்டங்க ளில் சுனாமி முன்னெச்சரிக்கையினை ஒரே நேரத்தில் நடத்தத் தீர்மானித்துள்ள தென அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் ஹெட்டி யாராய்ச்சி கூறினார்.

அன்றைய தினம் மாலை 3 மணி முதல் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதா கவும் அவர் கூறினார். இது தொடர் பாக நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,

கொழும்பில் லுனுபொக்குன, கம்பஹாவில் பள்ளியாவத்தை வடக்கு, களுத்துறையில் 730 ஏ, கஸ்பு, காலியில் 85, பட்ட பென்டிமுல்ல, மாத்தறையில் பொல்ஹேன, அம்பாந்தோட்டை யில் பட்டாத்த தெற்கு, அம்பா றையில் திருக்கோவில், மட்டக் களப்பில் களுவாங்கேணி, திரு கோணமலை, கிண்ணியா, யாழ்ப் பாணத்தில் வல்வெட்டித்துறை, புத்தளத்தில் பருதெல்பொல, கிளி நொச்சியில் வழிபாடு, முல் லைத்தீவில் கண்ணப்பாடு மற்றும் மன்னாரில் அசிப்பு மேற்கு ஆகிய பகுதிகளிலேயே எதிர்வரும் 13 ஆம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன எனக் கூறினார்.
FRIDAY, JULY 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment