Monday, July 5, 2010

காதர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்:மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை


ஐ. தே. க. கண்டி மாவட்ட எம்.பி., ஏ. ஆர். எம். அப்துல் காதருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சிசிர தெரிவித்தார்.

குறித்த கொலை அச்சுறுத்தல் காதர் எம்.பி.யின் கையடக்கத் தொலைபேசிக்கே வந்துள்ளது. கண்டி மாவட்டத்திலிருந்தே இவ்வச்சுறுத்தல் விடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் ஆரம்ப கட்ட விசார ணைகளிலிருந்து எழுந்திருப்பதாக தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சந்தேக நபரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நீதிமன்ற முன் அனுமதி இன்று கிடைக்கப் பெற்றதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் சொந்தக்காரர் பற்றிய மேலதிக விவரங்களை குறித்த நிறு வனத்தினூடாக பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக காதர் எம்.பி. வாக்களித்தமையை கண்டித்தே கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் அவரது கையடக்கத் தொலைபேசிக்கு இந்த கொலை அச்சுறுத் தல் வந்துள்ளது. அதனையடுத்து காதர் எம்.பி. உடனடியாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு சென்று இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் குழுக்கள் காதர் எம்.பியிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டதுடன் சந்தேக நபரைத் தேடி வலையும் விரித் துள்ளது.
MONDAY, JULY 05, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment