
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறையமைச்சருமான விமல் வீரவன்சவின் தாயார் டபிள்யூ. செலிநோநா (78) காலமானார்.
சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அவர் கடந்த இருவார காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யிலேயே நேற்று முன்தினம் இரவு மரண மாகியுள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை 5 மணிவரை அவரது பூதவுடல் பொரள்ளை ஜயரத்ன மலர்ச் சாலையில் வைக்கப்பட்டு பின்னர் அவ ரது சொந்த ஊரான மாத்தறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப் பட்ட அமைச்சர் விமல் வீரவன்ச தற் போது இராணுவ ஆஸ்பத்திரியொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையிலேயே அவரது தாயார் மரண மாகியுள்ளார்.
வைத்தியரது ஆலோசனைப்படி அமைச்சர் திடீரென சிகிச்சையை முடித்துக் கொள்ள முடியாதிருப்பதனால் தாயாரின் மரணச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக விசேட மருத்துவ ஏற்பாடுகள் செய்யப் படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment